"என் மனைவியோட கைகோர்க்க போறேன்".. தாத்தாவின் இறுதி வார்த்தைகள்.. மனைவியின் கல்லறையில் முதியவர் செய்துவைத்த வேலை.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

25 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது மனைவியின் கல்லறைக்கு அருகே தனக்காக குழி வெட்டி அதனை பாதுகாத்து வந்திருக்கிறார் முதியவர் ஒருவர்.

Advertising
>
Advertising

Also Read | பூமியை நெருங்கும் 110 அடி அகலமுள்ள விண்கல்.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்.. நாசா வெளியிட்ட பரபர அறிவிப்பு..!

காதல்

1925 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பிறந்தவரான எம்.சி. குப்பன், ராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். இவருடைய மனைவி பெயர் சாரதா. ராணுவத்தில் இருந்த போது தனது மனைவியைவிட்டு பிரிந்த நேரத்தில் இருவரது காதலும் இருவருக்குள்ளும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் சாரதா மரணமடைந்திருக்கிறார். இதனால் குப்பன் மிகுந்த கவலையில் மூழ்கினார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றபோது, ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் நிலத்தை வாங்கி பராமரித்து வந்திருக்கிறார் குப்பன். மேலும், தனது உறவினர்களிடம் ஒரு கோரிக்கையையும் வைத்திருக்கிறார் அவர். அதாவது தாமோ அல்லது தனது மனைவியோ உயிரிழந்தால் இருவரையுமே அந்த இடத்தில் தான் புதைக்கவேண்டும் எனக்கூறியிருக்கிறார்.

பிரார்த்தனை

அதன்படி சாரதாவின் உடலை அதே இடத்தில் புதைத்திருக்கிறார் குப்பன். மேலும், அங்கு நினைவிடம் ஒன்றையும் அவர் உருவாக்கியிருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் தனது மனைவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகே குழி வெட்டி அதனையும் பாதுகாத்து வந்திருக்கிறார். குழியில் மண் சரிந்துவிடாமல் இருக்க, அதனை சுற்றி கற்களையும் அவர் பதித்திருக்கிறார். தான் இறந்தால் அந்த குழியிலேயே தன்னை அடக்கம் செய்யவேண்டும் என குப்பன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அந்த குழியை சுத்தம் செய்யும் குப்பன், ஒவ்வொரு அமாவாசையிலும் தனது மனைவியை புதைத்த இடத்தில் பிரார்த்தனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இப்படி கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த குழியை பாதுகாத்துவந்த குப்பன் கடந்த 18 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவருடைய வயது 98 ஆகும். இறக்கும் போதும் தனது மனைவியின் கரங்களை பிடிக்க போவதாக ஆனந்தத்துடன் குப்பன் கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவரது விருப்பப்படியே அவரது உடல் அந்த குழியில் புதைக்கப்பட்டிருக்கிறது. குப்பனின் இறுதி ஊர்வலத்தில் அந்த கிராமமே கலந்துகொண்டு கண்ணீர் சிந்தியது. காலம் கடந்து நிலைத்து நிற்கும் காதலுக்கு குப்பன் அடையாமாகிப்போயிருக்கிறார்.

Also Read | "இடம் தானே அவங்களுக்கு வேணும்.. என் வீட்டை வேற இடத்துக்கு தூக்கிட்டு போய்டுறேன்".. சொன்னதை செஞ்சுகாட்டிய விவசாயி.. வாயடைச்சுப்போன மக்கள்..!

OLD MAN, WIFE, GRAVEYARD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்