'அடேய் 90s கிட்ஸ்!.. நம்ம நிலைம இவ்ளோ மோசமாயிடுச்சே'!.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்!.. 90s கிட்ஸ் ஆசை நிறைவேறுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணமாகாமல் மன உளைச்சலில் உள்ள எங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் நித்தியானந்தாவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமண வேண்டுகோள் என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், அனுப்புதல் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுதல் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.

தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தாவையும், தற்போது அவர் உள்ள கைலாசா என்ற இடம் மற்றும் அவருடைய பெண் சீடர்கள் பற்றியும் ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது 1990-ம் ஆண்டில் பிறந்தவர்கள் என்ற பெயரில் திருமணமாகாமல் மன உளைச்சலில் உள்ள எங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து அனுப்பப்படுவது போன்ற கடிதம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்