'துப்பட்டாவை கட்டிக்கொண்டு விளையாடிய'... '9 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் விளையாடியபோது துப்பட்டா கழுத்தை இறுக்கி, 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவரது மகன் காஜா உசேன் (9). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு ஜன்னலில் துப்பட்டாவை கட்டி, அதன் மறு முனையில் தனது கழுத்தில் கட்டியபடி கட்டிலின் மீது விளையாடி கொண்டிருந்துள்ளார் சிறுவன் காஜா உசேன். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன், கட்டிலில் இருந்து விழுந்துள்ளார்.
இதில் துப்பட்டா கழுத்தில இறுக்கியதில் மூச்சு திணறிய அவர் மயங்கி கிடந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர், இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த காஜா உசேனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காஜா உசேனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புது வீடு குடியேற போனபோது’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பலி’!
- ‘கனமழையால் நடந்த சோகம்’... ‘வீடுகள் இடிந்து விழுந்து’... ‘இடிபாடுகளில் சிக்கி’... 'சிறுமி, பெண்கள் உள்பட 15 பேர் பலி’!
- ‘திருமண விழாவிற்கு சென்ற தம்பதி’... ‘எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி’.. ‘சென்னை அருகே நடந்த பரிதாபம்!
- ‘ஸ்கூல் நோட் புக்கிலிருந்து’... ‘பேப்பரை கிழித்து’... ‘புகார் கொடுத்த 10 வயது சிறுவன்’... 'பாராட்டுகளை அள்ளிய போலீசார்'... வைரலான போட்டோ!
- ‘சேட்டை செய்ததாகக் கூறி’... ‘பள்ளியில் கயிறால்’... ‘கட்டிவைக்கப்பட்ட 2 மாணவர்கள்’!
- ‘துண்டான கை’... ‘விரைந்து செயல்பட்ட பெற்றோர்’... ‘நம்பிக்கை கொடுத்த மருத்துவர்கள்’... ‘மீண்டும் இணைந்த சிறுவனின் கை’!
- ‘காரில் உறவினர்களுடன் போனபோது’... ‘கண் இமைக்கும் வினாடியில்’... ‘நடந்து முடிந்த பயங்கரம்’... '3 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘வீட்டு முன்பு விளையாடியபோது’... ‘4 வயது சிறுவனுக்கு’... ‘வேளச்சேரி அருகே நடந்த சோகம்’!
- ‘பலமுறை கூறியும் கேட்காத கணவர்’... '2 குழந்தைகளுடன்'... 'இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'...!
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..