'சென்னையில் தயாரான 'இருமல் டானிக்'... 'பிஞ்சுகளை காவு வாங்கிய கொடூரம்'... என்ன 'டானிக்' அது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்இருமல் மருந்தைக் குடித்ததால் 9 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த மருந்து பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் உதய்பூர் பகுதியில் திடீரென 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியது. 9 குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது Coldbest-PC என்ற இருமல் மருந்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் Diethylene Glycol என்ற துணை வேதிப்பொருள் இருந்ததும், அதனால் மருந்தின் விஷத்தன்மை கூடியதும் ஆய்வில் தெரியவந்தது.
இதனிடையே Coldbest-PC மருந்தானது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நிறுவனம் தயாரித்தாலும் அதன் வேதிப்பொருட்கள் சென்னையை அடுத்த மணலியில் தயாரானதாகும். மருந்து உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு அதன் வேதிப்பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் அதன் வேதிப்பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இது தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தவறுகள் ஏன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இதற்கிடையே Coldbest-PC இருமல் மருந்தின் விற்பனை தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மருந்து இணையத்தில் கிடைக்க வாய்ப்பிருப்பதால், ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சீண்டிய சீனா!... அடக்கிய ஐநா... மாஸ் காட்டிய இந்தியா'... "ஐ.நா-வில் ஓங்கி ஒலிக்கும் இந்தியாவின் குரல்!"...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘திடீர் பனிச்சரிவு’.. 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலி..! மீட்பு பணி தீவிரம்..!
- "பாகிஸ்தானில் விழுந்த இந்திய வீரர்!!"... "காஷ்மீரில் பரபரப்பு!"... "மீட்கப்படுவாரா?"...
- 'தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு புதிய பதவி'...மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!
- ‘மாறிய இந்திய வரைபடம்’.. இன்று முதல் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர்..!
- 'காஷ்மீர்ல போராடுறாரு'... 'ஆபாச நடிகர் 'ஜானி சின்ஸின்' பட காட்சி ட்வீட்'... 'நீங்க பெரிய ரசிகரா'? ... நெட்டிசன்கள் கிண்டல்!
- ‘சர்ச்சைக்குரிய கருத்து’... ‘பதிவிட்ட அதிபருக்கு’... ‘அதிர்ச்சியளித்த ட்விட்டர்’!
- ‘நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள்’.. காஷ்மீர் விவகாரத்தில் ‘ரஜினிகாந்த் காட்டம்..’
- 'ரொம்ப சவாலான விஷயம்'...'ஆனா சூப்பரா பண்ணிட்டீங்க'...'பெண் அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு'!