‘சிறுவனுக்கு எமனாக மாறிய ராட்டினம்’!.. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவன் ராட்டினத்தில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் பத்மநாபன் என்பவர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடை அருகே சிறுவர்கள் விளையாடும் ராட்டினம் உள்ளது. இதை பத்மநாபனின் மகன் பிரணவ் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான். இந்நிலையில், ராட்டினத்தை இயக்குபவர் சிறுவன் பிரணவை ராட்டினத்தின் நடுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதையடுத்து, ராட்டினம் மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது சிறுவனின் ஆடை எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் சிக்கியது. இந்நிலையில், நிலைதடுமாறிய 8 வயது சிறுவன் பிரணவின் தலையில் ராட்டினத்தின் கம்பி பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
இந்நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கி சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் பிரணவ் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய சிறுவன் பிரணவின் தந்தை ‘சென்னை மெரினா கடற்கரையில் பெரும்பாலான ராட்டினம் ஓட்டுவோர் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். மேலும், தனது மகனை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, ராட்டினம் உரிமையாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
'எதுக்கு எடுத்தீங்க'?... 'இப்போ ஏன் நீக்குறீங்க'?...'உலககோப்பை'யிலிருந்து நீக்கம்...'கொதித்த வீரர்'!
'டி.வி. பார்த்த சிறுமியை அடித்து, வெயிலில் நிற்க வைத்த தாய்'... '5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'!
தொடர்புடைய செய்திகள்
- 'மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து'... '6 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி'!
- “இப்டியுமா மனிதர்கள் இருப்பாங்க”!.. ‘இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த பெண்’!.. பதற வைக்கும் சம்பவம்!
- “அட என்னா ஸ்பீடு”!.. ‘4 மணி நேரத்துல உலக சாதனை படைச்ச 7 வயது சிறுவன்’!
- 'தனியார் பேருந்தும் வேனும்' நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 15 பேர் பலி!
- “அதோட இத சம்பந்தபடுத்தாதீங்க”! நோயாளிகள் உயிரிழப்பு குறித்து பதிலளிக்கும் மருத்துமனை டீன்!
- “இவ்வளவு ஆத்திரம் தேவையா”?...தன்னை கொத்திய பாம்பை என்ன செய்தார் தெரியுமா! கோபத்தால் சோகத்தில் முடிந்த சம்பவம்!
- “தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் நடந்த சோகம்”!... எதிர்பாராமல் மிளா உயிரிழந்த பரிதாபம்! நெஞ்சை நெகிழ வைக்கும் காரணம்!
- சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.. உயிரிழந்த வெளிநாட்டுப் பறவைகள்.. நெல்லையில் சோகம்!
- திடீரென உயிரிழந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்..! சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
- கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை, அவரின் 1 வயது குழந்தை பரிதாப பலி..! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!