8 மாச கொழந்த 'பசியில' மண்ண சாப்பிட்டிருக்கு... 'மனநலம்' பாதித்த தாய்... ஊரைவிட்டு ஓடிய தந்தை... அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உணவு எதுவுமின்றி பசியில் 8 மாத குழந்தை மண்ணை சாப்பிட்ட கொடூரம் அதிர்ச்சி அளித்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து பராமரித்து வரும் பணியை கடந்த 3 ஆண்டுளாக முகமது அலி என்னும் இளைஞர் செய்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை என்னும் பகுதியில் உள்ள தாய் மற்றும் குழந்தை குறித்து அவரிடம் தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்ற முகமது அலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அந்த குழந்தையின் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டு பசியில் கதறிய குழந்தையை கூட கவனிக்காமல் இருந்திருக்கிறார். சுற்றிலும் குப்பைகளுக்கு மத்தியில் பசியில் அழுது மண்ணை சாப்பிட்டு அந்த குழந்தை கிடந்துள்ளது. இது எதுவும் தெரியாமல் அந்த குழந்தையின் அம்மா இருந்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையையும், அம்மாவையும் போலீசார் உதவியுடன் மீட்டு அவர்களை காப்பகத்தில் தங்க வைத்துள்ளார்.
விசாரணையில் அவரின் பெயர் செல்வி என்பதும் அவருக்கு காசநோய் இருந்தது தெரிய வந்ததால், அவரின் கணவர் அவரைவிட்டு விட்டு ஓடிவிட்டதும் தெரிய வந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்னால் அரசு அளித்த நிவாரண பணத்தை வைத்து குழந்தைக்கு சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். பணம் தீர்ந்து போனதும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், கணவரும் ஓடிப்போக செல்விக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.
செல்வியின் அம்மாவுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் மகள், பேரனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார்களாம். கடைசியாக கலெக்டரிடம் அனுமதி வாங்கி தற்போது கொரோனா சிறப்பு முகாமில் அவர்களை தங்க வைத்துள்ளனர். பசியில் இருந்த குழந்தை சாப்பிட்ட வேகத்தை நினைத்தால் இப்போது கூட புல்லரிக்குது என்று சொல்லும் முகமது அலி குழந்தையின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். இப்போ அதுக்கான பயணம் தொடங்கியிருக்கு என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதிகரிக்கும் 'கொரோனா'வுக்கு நடுவிலும்... ஆறுதல் அளிக்கும் 'நல்ல' செய்தி இதுதான்!
- சென்னை: "நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்".. "பரனூர் டோல் கேட்டில் பணம் கட்ட வேணாம்" என உத்தரவிட்ட செங்கல்பட்டு எஸ்.பி!
- 'அவருக்கு கொரோனா இருக்கும்னு நினைக்குறேன்...' 'வீட்லலாம் ஏத்த முடியாது...' 'மனைவி வீட்டுக்குள்ள விடலன்னு தெருவில் நின்ற கணவர்...' கடைசியில்...!
- ’எய்ம்ஸ்’ மருத்துவரின் ’சூப்பர் ஐடியா...’ ’கண்ணுக்கு’ தெரியாத ’வைரசைக் கொல்ல...’ இப்படி 'ஒரு வழி' இருப்பது 'தெரியாமல் போச்சே..'
- 'வெஸ்டன் டாய்லெட் வழியா கொரோனா பரவ சான்ஸ் இருக்கு...' 'பிளாஷ் பண்றப்போ தண்ணியில...' பிரபல பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவு...!
- “இரவில் தூங்கவே முடியல.. சுத்தி இருக்குறவங்க பத்தி கவலை இல்லை.. மன ஆரோக்கியம்தான் முக்கியம்!".. வாடிக்கையாளரை சந்திக்க லாக்டவுன் விதிகளை மீறி, செல்லும் பாலியல் தொழிலாளர்!
- கல்யாணத்துக்கு 'கெஸ்டா' வந்து இப்படி அநியாயமா... பொண்ணு, மாப்பிளைய 'பிரிச்சு' வச்சுட்டு போய்ட்டாரே!
- தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!? குமறும் ஊழியர்கள்!.. முழு விவரம் உள்ளே
- 'சென்னை', கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்ல... இருந்து 'எங்க' மாநிலத்துக்கு யாரும் வராதீங்க!
- கொரோனாவுக்கு 'பலியான' முதல் 'காவலர்'! 'சென்னையில்' 47 வயது காவல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!