'இரும்பு கம்பியால் வேலி'...'தண்ணீர், காய்கறி எல்லாம் ரெடி'... 'தனிமைப்படுத்தப்பட்ட '1800 குடும்பங்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதியில் வசிக்கும் 1,800 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதோடு அவர்கள் தங்கியிருந்த பகுதிகள், அருகில் உள்ள வீதிகள் ஆகியன தனிமைப்படுத்தப்படுகின்றன.
அதன்படி கோபிசெட்டிபாளையத்தில் கருமாயாவீதி, ராமர் எக்ஸ்டன்சன், தேர் வீதி, வாய்க்கால்ரோடு, ஜெயராம் வீதி, கிட்டாச்சாமி வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, கடை வீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மக்களிடம் சென்று எதற்காக மக்கள் தனிமைபடுத்தபடுகிறார்கள் என்பது குறித்து விளக்கமளித்தனர்.
இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வராத வகையிலும், மற்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத வகையிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறும்போது, ''கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கோபியில் குறிப்பிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர், காய்கறி, மருந்து போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்'' என கூறினார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனோவால் 'ஆடம்பர' ஹோட்டலில்... '20 பெண்களுடன்' தனிமைப்படுத்திக் கொண்ட மன்னர்?
- ‘நகர்ந்து நகர்ந்து ஓடும் குட்டிப்புதர்!’.. ஊரடங்கு நேரத்தில் நபர் செய்த வைரல் காரியம்.. ‘தீயாக’ பரவும் வீடியோ!
- 'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்!
- ‘சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதி’.. ‘அவர் சென்ற இடம் வெளியீடு’.. ‘அந்தநாள் அங்கபோன எல்லோரும் இத பண்ணணும்’.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
- கிடைத்தது 'கிரீன்' சிக்னல்... 'கொரோனாவை' குணப்படுத்த... 'பழைய' சிகிச்சை முறையை 'கையில்' எடுக்கும் அமெரிக்கா!
- ‘கணுக்கால் முறிவு’!.. ‘இன்னும் 240 கிமீ இருக்கு’.. ‘எனக்கு வேற வழி தெரியல’.. ஊரடங்கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘எனக்கு கொரோனா இருக்கு!’.. போலீஸாரின் மீது எச்சில் துப்பிய இளைஞர்.. கவலை தெரிவித்த உயர்காவல் அதிகாரி!
- 'கொரோனா வைரஸின் பிடியில் சிக்காமல்'... 'உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள நாடுகள் இவைகள் தான்'!
- “தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி!”.. “முதல் முறையாக அதிக எண்ணிக்கை!”.. பாதிக்கப்பட்டோர் 124 ஆக உயர்வு!
- ‘20 வருஷமா ராணுவத்துல இருக்காரு’.. ‘அவருக்கு இப்டி ஆனதை யாராலையும் தாங்கிக்க முடியல’.. கதறியழுத குடும்பம்..!