Neeya Naana : எண்ணுனா கண்ணு பட்ரும்.. புடவைக்கு மட்டும் 7 பீரோவா.? - ‘இவங்களோடதான் போட்டியே’.. ட்ரெண்ட் ஆன பெண்மணி..
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இதில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும். மேலும் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டுக் கொண்டு, அதில் சரியாக பாய்ண்ட்டுகளை எடுத்துரைத்து பேசுவதன் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி சில நேரம் கலகலப்பாகவும், சுவாரஸ்யம் கலந்தும் செல்லும். மறுபக்கம், தீப்பறக்கும் விவாதங்கள் கூட உருவாகி பார்ப்பவர்கள் பலரையும் கூட நிகழ்ச்சியுடன் ஒன்றி போக வைக்கும். அதே போல, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி ஒருபுறமும், அதே வேளையில் ஜாலியான டாபிக்குகளை கையில் எடுத்து அதனை சுற்றி நடைபெறும் விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வார ஷோவில் புடவை நெய்பவர்கள் மற்றும் புடவை அணியக்கூடியவர்கள் இடையிலான உரையாடல் கோபிநாத்தின் நெறியாள்கைக்கு உட்பட்டு நிகழ்த்தப்பட்டது. இதில் தறி ஆடைகளை அணியக்கூடிய பெண்மணி ஒருவர் பேசும்பொழுது, தான் நிறைய புடவைகள் வைத்திருப்பதாக குறிப்பிட, அப்போது கோபிநாத் அப்பெண்மணியிடம், “ஒரு தோராயமாகவாவது சொல்லுங்கள்.. எத்தனை புடவை நீங்கள் வைத்திருப்பீர்கள்? இது ஒரு சமூக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி” என்று ஜாலியாக கேட்கிறார்.
அதற்கு பதில் அளித்த அந்த பெண்மணி, “நான் புடவைகளை எண்ணுவதில்லை. எண்ணினால் கண்ணு பட்டுவிடும் என்பதுதான் அதற்கு காரணம். இருப்பினும் தோராயமாகச் சொல்ல வேண்டும் என்றால் சுமார் ஒரு 7 பீரோவில் புடவைகளை வைத்திருப்பேன்” என்று கூறுகிறார். இதை கேட்ட அரங்கத்தினர் அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர்.
இப்போது இந்த பெண்மணி வைரலாகி வருகிறார். பொதுவாகவே பல பெண்களுக்கு புடவைகள் பிடிக்கும், பிடித்த புடவைகளின் கலெக்ஷன்கள் அவர்களிடம் இருக்கும் என்பதற்கு மத்தியில், தற்போது இந்த பெண்மணி ஏழு பீரோ நிறைய புடவைகள் வைத்திருப்பதாக சொல்லும்போது, எந்த மாதிரி கலெக்ஷன்கள் இவரிடம் இருக்கும் என்பன போன்ற பேச்சுகள் வைரலாகி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Neeya Naana : அம்மா பேச்சை கேட்டு இயங்கும் மனைவிகள்.? பேசுனதை கேட்டு நிகழ்ச்சியை விட்டே கிளம்ப முடிவெடுத்த கோபி 😂
- "தியேட்டர்ல பாத்த முதல் விஜய் படம் பீஸ்ட்".. Halamathi Habibo அர்த்தம் இது தான்.. நீயா நானா வைரல் சூடான் இளைஞர் Exclusive!!
- “ஹனிமூனுக்கு தனியா போலாம்னு சொன்னேன்.. எடிட்டிங்ல போயிடுச்சு”.. சரண்டர் ஆன கணவர்.. NEEYA NAANA வைரல் தம்பதி ஜாலி பேட்டி..
- "ஹனிமூன் ட்ரிப்புக்கு கூட 8 நண்பர்களா..?".. காரணத்தை உடைத்த கணவர்..! Neeya Naana வைரல் Couple ஜாலி பேட்டி..
- Neeya Naana : “ஹனிமூன் ட்ரிப்புக்கு கூட 8 நண்பர்களோடதான் வந்தாரு..!😅” - Possessive ஆன மனைவி.. டிவி நிகழ்ச்சியில் கணவருக்கு போட்ட செல்ல கண்டிஷன்ஸ்.! 😍
- “பார்வைய இழந்துட்டேன்.. என்ன விட்டு போய்டுனு அழுதேன்.. ஏன் போகல?” .. நீயா நானாவில் பெண் உருக்கம்.. கணவர் கூறிய நெகிழ்ச்சி பதில்.!
- "ஏ கோபி..!!! எவ்ளோ தைரியம் இருந்தா கேள்வி கேப்ப" .. என்ன பொசுக்குனு இப்படி பேசிட்டாங்க 😅 ட்ரெண்ட் ஆன ப்ரோமோ.. Neeya Naana
- Neeya Naana : "Love செட் ஆகாத இல்லாத முரட்டு சிங்கிள்ஸ்".. காரணம் உடைக்கும் பெண்கள்!- இளசுகளை கவரும் இந்த வார நீயா நானா.!
- Neeya Naana : "யாருய்யா இவரு".. ஒரே ஒரு ஐஸ் க்ரீம்.. இந்த வார நீயா நானாவில் ட்ரெண்ட் ஆன இளைஞர்.!!
- Neeya Naana : "ஒரு செகண்ட்ல பெண்களை எடை போடாதீங்க.. அந்த குடும்பம் தலைநிமிரும்!".. நீயா நானா ‘வைரல்’ தாய்க்காக பேசிய கவிஞர் தாமரை & நயன்தாரா பட இயக்குநர்.!