"கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி!"... "சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேர்"... "தமிழக அரசு தீவிர கண்காணிப்பு!"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேரை, அவர்களின் வீடுகளிலேயே தங்க வைத்து கண்காணிக்கப்படுவதாக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சீனா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை, நேற்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 5 நாட்களாக சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். இதுவரை, 15 ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 10 சீனர்கள் உள்பட 68 பயணிகள் பொது இடங்களுக்கு செல்லாமல் அவர்களின் வீடுகளிலேயே தங்க வைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்", என்று கூறினார்.

CHENNAIAIRPORT, CHINA, CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்