'டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் வரல'... 'கொரோனா வார்டில் இருந்தவருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பரிசோதனை அறிக்கை வராத நிலையில், கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவதாக ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 66 வயது முதியவரான இவர், ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்தவர். கேரளாவில் மீன் பிடி தொழில் செய்துவரும் இவர், அங்கிருந்து வந்ததிலிருந்து காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இதற்கிடையே அவருக்கு இன்னும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்பு தான் முதியவரின் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா பாதிப்பால்’... ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’... 'மத்திய அரசு அறிவிப்பு'!
- 'தமிழகத்தில்' கொரோனா தற்போது...'எந்த' கட்டத்தில் உள்ளது?... முதல்வர் பேட்டி!
- Video: நாலு நாளா 'சாப்டல' ரொம்ப பசிக்குது...'100-க்கு' போன் செய்த இளைஞர்கள்... 'கலங்க' வைத்த சம்பவம்!
- ‘4 மடங்காக அதிகரித்த இறப்பு’... ‘விமான நிலையத்தை மார்ச்சுவரி ஆக்குறோம்’... ‘இங்கிலாந்தை துரத்தும் துயரம்’!
- 'வதந்தி' பரப்பினால் 'கடும்' நடவடிக்கை... 'வெளிநாட்டு' பயணங்களை 'மறைக்கக் கூடாது..'. அமைச்சர் 'ஆர்.பி. உதயகுமார்' எச்சரிக்கை...
- கடைசில 'அவங்களும்' ஒரேயடியா 'சீனா' பக்கம் சாஞ்சுட்டாங்க... அதிரவைத்த 'அமெரிக்க' அதிபர்... என்ன காரணம்?
- ‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'!
- “உணவு டெலிவரி, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்’ முதலிய சேவைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இருக்கும்”!.. முதல்வர் அறிவிப்பின் முழு விபரங்கள் உள்ளே!
- 'குழந்தைகள் ஏன் கொரோனா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி?'... இந்த வீடியோவ அவசியம் காட்டுங்க!
- '10 மாதக்' குழந்தைக்கு 'கொரோனா' தொற்று... தனிமைப்படுத்தப்பட்டு 'சிகிச்சை'... 'பதற்றத்தில்' குடும்பத்தினர்...