'ஊஞ்சல்' ஆடிய 'பாட்டி!'.. 'தூண்' சரிந்து விழுந்து 6 வயது பேரனுக்கு நேர்ந்த 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் பாட்டி ஒருவர் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது நடந்த சம்பவத்தால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் பழமைவாய்ந்த செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தென்புறத்தில் கோவில் காவலாளி காளிமுத்து என்பவர் வசித்துவருகிறார். கடந்த வியாழக்கிழமை மாலையில் காளிமுத்துவின் 50 வயதான மனைவி செல்வி என்பவர் வீட்டு தூணிலும், அருகில் உள்ள வேப்பமர கிளையிலும் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்திருந்துள்ளார்.
அப்போது அவருடைய 6 வயது பேரன் யுவன்ராஜ் என்பவர் வேகமாக வந்து பாட்டியின் மடியில் படுத்துள்ளார். ஆனால் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் சிறுவன் வேகமாக வந்து பாட்டியின் மடியில் படுத்ததால், பாரம் தாங்காமல் தூண் சரிய, ஊஞ்சல் விழுந்தது. இதனை அடுத்து இருவரும் படுகாயமடைந்த நிலையில் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். மூதாட்டி செல்வி ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற செய்திகள்