'இறந்து 2 மணி நேரமாச்சு!'.. 'சென்னை விமான நிலையத்தில்'.. 'கண்கலங்க வைத்த சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சேலையூரைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவரது மனைவி கீதா. ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்த தம்பதியருக்கு ரித்தீஸ் எனும் 6 மாத குழந்தை உள்ள நிலையில், கீதாவைப் பார்த்துக்கொள்வதற்காக கீதாவின் தாய் பிரிட்டோ குயின் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
அதன் பின் கீதா, தன் தாய் மற்றும் தன் குழந்தை ரித்தீஸ் ஆகியோருடன் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் வழியாக, சென்னை விமான நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்கு அடைந்தனர். அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் சோதனைக்காக காத்திருந்தபோதுதான், கீதாவின் குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்துள்ளதை அறிந்தார்.
உடனே அவர் அங்கிருந்த விமான நிலைய மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று ஓடியுள்ளார். ஆனால் அங்கு, குழந்தை இறந்து 2 மணி நேரம் ஆனதாக மருத்துவர்கள் கூறியதால் கீதா நிலைகுலைந்துள்ளார். குழந்தையின் உடல் குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விமான நிலைய அதிகாரிகள், விமான ஊழியர்கள் மற்றும் கீதாவின் தாய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரொம்ப த்ரில்லா இருக்கு'! 'நீங்க பாத்து போங்க'.. 'பாராகிளைடிங்'கால் பறிபோன புதுமாப்பிள்ளை உயிர் ..! தம்பி உருக்கம்..!
- ‘வீட்டில் வேலை பார்த்து வந்த இளைஞர்’... 'செய்த காரியத்தால்'... ‘குடும்பத்தினருக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘சென்னைல நல்ல வேல பாக்கறேன்னு நம்பிட்டு இருந்தாங்க’.. ‘57 வழக்குகளில் சிக்கிய’.. ‘இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்’..
- 'காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்’... ‘இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’... ‘பதறித் துடிக்கும் பெற்றோர்’!
- ‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’!.. மகளை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய தாய்..! அதிர வைத்த காரணம்..!
- 'பைக் மீது மோதிய வேன்'!.. 'தூக்கிவீசப்பட்ட 3 பேர் '.. சென்னை ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'தாயுடன் தகாத உறவு' .. 'கண்டித்த மகன்'.. 'கேட்காத ஆட்டோ டிரைவர்'.. சென்னையில் நடந்த பயங்கரம்..!
- 'இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... வானிலை மையம் தகவல்... விவரம் உள்ளே!
- 'அவங்க ஆசையே இதான்.. நான் ஆடுவேன்!'.. தாயின் இறப்புக்கு கூட செல்லாமல் டெஸ்ட்க்கு தயாராகும் வீரர்!