'ஃபிரிட்ஜிக்குள்' புகுந்த '6அடி நீள பாம்பு'... 'அலறியடித்து' ஓட்டம் பிடித்த 'குடும்பத்தினர்...' வனத்துறையினரின் 'சாதுர்யமான செயல்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில், ஒரு வீட்டிற்குள் ஃபிரிட்ஜிக்குள் இருந்த 6 அடி நீள பாம்பை வனத்துறையினர் சாதுர்யமாக மீட்டனர்

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வீட்டில் குடும்பத்தினருடன் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்ல் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்ட மணிகண்டனின் குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அங்கும் இங்கும்ஓடிய பாம்பு பிரிட்ஜிக்குள் சென்று பதுங்கியது.

இதையடுத்து குடும்பத்தினரை வீட்டிற்கு வெளியே பாதுகாப்பாக இருக்கச் செய்து விட்டு, மணிகண்டன் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஃபிரிட்ஜிக்குள் இருந்த பாம்பை சாதுர்யமாக பிடித்தனர். ஒரு பக்கெட்டுக்குள் பாம்பை போட்டு அடைத்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர். வீட்டுக்குள் புகுந்த பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்