‘ஊரடங்கில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது’... ‘ஆண்களுக்கும், பெண்களுக்கும்’... ‘எச்சரிக்கை விடுத்த ஏடிஜிபி ரவி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், குடும்பத்தில் சண்டை சச்சரவு காரணமாக பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஏடிஜிபி ரவி நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த 2 நாட்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள். குடும்பத்தில் பெண்கள் மீது வன்முறையை ஏவியவர்கள். இந்த சமயத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
லாக் டவுன் சமயத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. இதில் கணவன், மனைவி இடையேதான் பிரச்சினை அதிகம். கணவரோ அல்லது மனைவியோ இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். கணவர்கள் ஒரு எச்சரிக்கை. உங்களுக்கு மனைவியை அடிக்க உரிமையே கிடையாது. அது சட்டப்படி குற்றம். எனவே ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஊரடங்கு காலகட்டத்தை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றிக் கொள்ளுங்கள்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம். பெண்கள், குழந்தைகளுக்கு உரிய மதிப்பைக் கொடுக்கவேண்டும். இது உங்களுக்கும் சமூகத்துக்கும் முக்கியமான ஒன்று. பெண்களுக்கு நாங்கள் சொல்வது. உங்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் 181, 1091, 100, 102 இந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டால் அடுத்த நிமிடமே உங்களுக்கான உதவி கிடைக்கும்” இவ்வாறு ஏடிஜிபி ரவி கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா!?... தயாராகும் சிறப்பு மருத்துவமனை!... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- 'வாழ வேண்டிய பொண்ணு, அவளுக்கா இந்த கதி'... 'கதறி துடித்த தந்தை'... சென்னையில் நடந்த துயரம்!
- 'நள்ளிரவில்' முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து... 101 வயது பாட்டி பார்த்த வேலை... 'நொந்து' போன போலீசார்!
- மார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள்... சென்னை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிக்கு கொரோனா!
- 'வரதட்சணை கொடுக்கல, உனக்கு வாரிசு ஒரு கேடா'...'யாரும் செய்ய துணியாத காரியம்'... கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்!
- 'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்!
- ‘மூச்சு திணறல்’.. ‘24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு’.. கொரோனா பாதிப்பில் இருந்து சென்னை மூதாட்டி குணமடைந்தது எப்படி..?
- 'கட்டுக்குள்' வந்துவிட்ட போதும்... இன்னும் 'இந்த' ஆபத்து இருக்கு... கவலையுடன் 'எச்சரித்துள்ள' சீன அதிபர்...
- ‘சட்டென மாறி ஜில்லிட வைத்த தமிழக வானிலை’... ‘இடி, மின்னலுடன் சென்னையில் மழை’... ‘சொன்னது போலவே கோடை வெயில் மாறியது எதனால் தெரியுமா?’...
- ‘வீட்டில் தகராறு செய்த மகன்’.. ‘கோடாரியை’ கையில் எடுத்த தந்தை.. மதுரையை அதிரவைத்த சம்பவம்..!