'கால் சென்ட்டர் நடத்திய இளைஞர்களால்’... ‘பரிதவித்துப்போன மக்கள்’... சென்னை நங்கநல்லூரில் அதிரவைத்த சம்பவம்... !
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை நங்கநல்லூரில் போலி கால் சென்டர் நடத்தி, வங்கி கடன் வாங்கி தருவதாக, 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 3 பெண்கள் உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் உள்பட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வபிரபு (29), அதே ஊரைச் சேர்ந்த வினோத் (28), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வகுமார் (28) ஆகியோர் நங்கநல்லூரில் ஐ கோர்வ் Solution என்ற கால் சென்டரை நடத்தி வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த கால் சென்ட்டரில், இவர்கள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த இளம்பெண்களின் மூலம் சென்னை, மதுரை, கோவை என, பல்வேறு பகுதிகளில் வசிப்போரிடம், வங்கி கடன் வாங்கி தருவது போலவும், வங்கிகளில் இருந்து பேசுவது போலவும் தொடர்பு கொண்டு உள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் மட்டும், வங்கி கடன் வாங்கி கொடுத்தால் போதும் என்பவர்களிடம், 'உங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும், அதற்கான தகுதி உள்ளது' என பேசியுள்ளனர். மேலும், தாங்களே வங்கி கடன் வழங்குவது போலவும், ஆசை காட்டிஉள்ளனர்.
அப்போது, தங்கள் வலையில் சிக்கும் நபர்களிடம், 5 லட்சம் ரூபாய் கடன் வழங்க, முன்பணமாக, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறி, அந்த பணம் தங்களுக்கு உடனடியாக கிடைக்கும் வகையில், பேடிஎம், கூகுல்பே உள்ளிட்ட, மொபைல் போன் செயலிகள் வாயிலாக வசூலித்ததாகத் தெரிகிறத. பணம் கொடுத்தோரிடம் கடன் தொகை, 15 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறியுள்ளனர். 15 நாட்களுக்கு பின், அவர்கள் தொடர்பு கொண்டால், உங்களுக்கு, வங்கிகள் கடன் கொடுக்க மறுத்து விட்டன. உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் செலுத்திய முன்பணம், 45 நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும் என, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். அதற்கு பின், மொபைல் போன் எண்களை மாற்றி விடுவர். இந்த கும்பல் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடத்திய விசாரணையில் போலி கால்சென்ட்டர் மூலம் 10 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதன்பிறகே, 3 பெண்கள் உள்பட செல்வபிரபு, செந்தில்குமார், வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் வங்கி ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பேஸ்புக்கில் காதல்'... 'பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்'... இதுதாண்டா காதல்ன்னு நிரூபித்த பெண்!
- ‘கைவிட்ட பிள்ளைகள்’.. ‘பாட்டில் வித்து சிறுகச்சிறுக சேத்த பணம்’.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்..!
- Video: அச்சுறுத்தும் 'கொரோனா'... கையோடு கொண்டுவந்த 'பொட்டலத்தை' வைத்துவிட்டு... வேகமாக 'ஓடிச்சென்ற' மர்ம நபர்... அதிர்ச்சியில் 'உறைந்த' காவல்துறை!
- VIDEO: பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியால் குத்திச் சண்டை.. அம்பத்தூர் அருகே பரபரப்பு..!
- 'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்!
- ‘லவ் பண்ண மாட்டியா?’...‘இளம் பெண்ணுடன் வீடியோ கால் பேசிக்கொண்டே’.. ‘இளைஞர் எடுத்த விபரீத காரியம்’!
- 'வடபழனியில்' பரபரப்பு... பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு 'பாலியல்' தொல்லை... நீங்களே இப்படி செய்யலாமா? அடித்து உதைத்த பொதுமக்கள்!
- 'மசாஜ்' செண்டர் பெயரில் பாலியல் தொழிலா?... புகாரின் அடிப்படையில் கரூர் 'போலீசார்' தீவிர விசாரணை!
- 'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்!
- நடுவானில் 'கொரோனா வைரஸ்' இருப்பதாக கூறிய வாலிபர்... விமானத்தை 'அவசரமாகத்' தரையிறக்கி... தலையில் தட்டி 'இழுத்துச்சென்ற' போலீஸ்!