7 வயது சிறுவனின் ‘வாய்க்குள் இருந்த 526 பற்கள்’.. ‘ஷாக்’ ஆகி நின்ற மருத்துவர்கள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மருத்துவர்கள் ஏழு வயது சிறுவனின் வாயிலிருந்து முறையற்று வளர்ந்திருந்த 526 பற்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பிரபுதாஸ் என்பவரின் மகனுக்கு 3 வயது முதல் வாயின் கீழ்த்தாடையில் வீக்கம் இருந்துள்ளது. இதற்காக பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது சிறுவன் காம்பவுண்ட் காம்போசைட் ஆன்டான்டோம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது சிறுவன் மேல் சிகிச்சைக்கு சரியாக ஒத்துழைக்காததால் பெற்றோர் சிகிச்சையைத் தொடர முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில் சிறுவனுக்கு 7 வயதான போது கீழத்தாடையில் அதிக வலி ஏற்படவே பெற்றோர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்-ரே மற்றும் சி.டி.ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய கீழ்த்தாடையில் ஏராளமான பற்கள் வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் வாயிலிருந்த 526 பற்களை நீக்கியுள்ளனர். நீக்கப்பட்டுள்ள பற்கள் 200 கிராம் எடையில் சிறியதும், பெரியதுமாக  இருந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர்கள் ஒருவரின் வாயிலிருந்து இத்தனை பற்கள் நீக்கப்பட்டது உலக அளவில் இதுவே முதல்முறை எனத் தெரிவித்துள்ளனர்.

CHENNAI, 7YEAROLD, BOY, 526TEETH, COMPOUNDCOMPOSITEODONTOMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்