'அவசர நேரங்களில் உதவும் 515 கணேசன்...' ' ஊரடங்கிலும் இலவசம் தான்...' இரும்பு வியாபாரியின் இளகிய மனம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அந்த காலம் முதல் இந்த காலம் வரை தனது கார் மூலம் பொதுமக்களுக்கு உதவி வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கணேசன். இவரது கார் நம்பரை சேர்த்து இவரை 515 கணேசன் என்றே அழைப்பார்களாம்.

Advertising
Advertising

515 கணேசன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசித்து வருகிறார். பழைய இரும்பு வியாபாரியான இவர், 45 ஆண்டுகளுக்கு முன்னரே தான் வைத்திருந்த 515 என்ற எண்ணுடைய காரில் இதுவரை சுமார் 5,600-க்கும் மேற்பட்ட சடலங்களை கட்டணமின்றி ஏற்றிச்சென்று உதவியுள்ளார். இதன் காரணமாகவே இவருக்கு '515 கணேசன்' என்ற பெயர் வந்துள்ளது.

இவரது சேவையை அறிந்த சில தன்னார்வலர்கள் இவருக்காகவே மேலும் 2 கார்களை வாங்கிக்கொடுத்து அவருடைய பணியை மேலும் விரிவுப்படுத்த செய்துள்ளனர்.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் மூன்று கார்களை கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறார் கணேசன். கணேசன் தனது கார்கள் மூலம் உடல்நிலை சரியில்லாதவர்களை இலவசமாக ஏற்றிச்சென்று அரசு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் இருந்தும் வீட்டுக்கும் அழைத்துச் சென்றதுடன், 8 சடலங்களை ஏற்றி சென்று உதவி வருகிறார்.

இதற்கு முன் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகளான தானே, ஒக்கி புயல், சென்னை மற்றும் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்