பீதியை கிளப்பும் 'கொரோனா' வைரஸ்... தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் '51 பேர்'... "இது எப்ப நடந்தது..."
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து தமிழகம் திரும்பி உள்ள 51 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதகரித்திருப்பதையடுத்து, அங்குள்ள இந்தியர்கள் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை திரும்ப அழைத்து வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இது வரை நாடு திரும்பியவர்களில் 450 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சமீபத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த ஒருவர் என 8 பேர் சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். 28 நாட்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்றாலும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. சீனாவில் இருந்து இது வரை தமிழ்நாட்டுக்கு 51 பேர் திரும்பி உள்ளதாகவும் அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 51 பேர் வீட்டுக்கும் காலை, மாலை மருத்துவ பணியாளர்கள் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள் என்றும், 51 பேரும் 28 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: "கொரோனா வைரஸுக்கு சவால் விடும் சென்னை மருத்துவர்!"... "மருந்தை ஆய்வு செய்யவிருக்கும் சுகாதாரத்துறை!!"... "அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பால் பரபரப்பு!"...
- ‘கொரனோ வைரஸ் பாதிப்பு’.. அவசர அவசரமாக கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த ஆப்ரேஷன்..!
- "ஓம் தரே துத்தாரே துரே சோஹா"... இந்த மந்திரத்தை சொன்னா 'கொரோனா' வைரஸ் கிட்ட கூட வராது... 'தலாய்லாமா' அறிவுரை
- 'கொரோனா' வைரஸ் அபாயம்: 'சீனா'வில் இருந்து 'கோவை' வந்த 8 பேருக்கு... 'கல்யாணம்', காது குத்துகளில் கலந்துகொள்ள தடை!
- “இதான் அந்த கொரோனா வைரஸ்!”.. “மைக்ரோஸ்கோப்பிக் படங்களை வெளியிட்ட சீனா!”... கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!
- 'கொரோனா' வைரசால் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க நேரிடும்... ஒரு வருடத்திற்கு முன்பே கணித்த 'பில்கேட்ஸ்'...
- சீனாவின் 'பயோ-வெப்பன்' கொரோனா?... சந்தேகம் எழுப்பும் 'இஸ்ரேல்' விஞ்ஞானி... தனக்குத்தானே 'ஆப்பு' வைத்துக் கொண்ட 'சீனா'...
- "அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகும் இந்தியா!"... "அமெரிக்காவை முந்தியது!"...
- 'கொரோனாவுக்கு' எயிட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்து... என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் 'சீன அரசு'...
- 'வட இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறி?'... 'பொதுமக்கள் அதிர்ச்சி'...