"பொது இடங்களில் மாஸ்க் போடலைன்னா அபராதம்".. சென்னை மாநகராட்சி அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 11 வயசுலயே கண்டுபிடிப்பு.. பார்வை மாற்றுத்திறனாளி சிறுவனின் பேச்சை கேட்டு வியந்துபோன பிரதமர் நரேந்திர மோடி.. வைரல் வீடியோ.!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ், உலகெங்கிலும் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களிலேயே உலக நாடுகள் முழுவதும் பரவிய இந்த வைரஸ், லட்சக்கணக்கான உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்தது. இதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பல முன்னணி நிறுவனங்கள் உருவாக்கின. இவை புழக்கத்திற்கு வந்த பின்னர் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. ஆகவே, உலக நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டு மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இது ஒருபக்கம் இருந்தாலும் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக் கவசங்களை அணிதல், தனிநபர் இடைவெளிகளை கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சமீப வாரங்களாக சென்னையில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆலோசனை கூட்டம்

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் தவறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கனவே வலியுறுத்திவந்த நிலையில், மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "அவரை லவ் பண்றேன்..அவரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்".. பெற்றோரின் சம்மதப்படி காதலனை கரம்பிடித்த இளைஞர்..!

CHENNAI, CHENNAI NEWS, WEARING MASK, CHENNAI CORPORATION, PUBLIC PLACE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்