விடுமுறையில் சுற்றுலா சென்ற குடும்பம்... படகு கவிழ்ந்து... 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரம் தொண்டி அருகே சுற்றுலா சென்றபோது படகு கவிழ்ந்து விழுந்ததில், 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘புதிய தலைமுறை ஊடகத்தின்படி’ ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள உசிலனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார், வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா (35). இவர்களுக்கு  விஷ்வஜித் (5), தஷ்னி பவுசிகா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். உசிலனக்கோட்டை கிராமத்தில் குழந்தைகளுடன் அமுதா வசித்து வந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால் அமுதா, அவருடைய குழந்தைகள் உள்பட 3 குடும்பத்தை சேர்ந்த 15 பேர், தொண்டி அருகே உள்ள காரங்காடு சுற்றுலா மையத்திற்கு சென்றனர்.

பின்னர் மாலை 3 மணி அளவில் ஒரு படகில் பெரியவர்கள் 8 பேர், சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் 7 பேர் என 15 பேரும் சதுப்புநில காடுகளை சுற்றிப் பார்க்க ஆற்றுப் படுகையில் படகு சவாரி செய்தனர். இயற்கை காட்சிகளை ரசித்துவிட்டு கரைக்கு அந்தப் படகை திருப்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 15 பேரும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். எல்லோரும் மீட்கப் பட்டநிலையில், அமுதாவின் மகன் விஷ்வஜித்தின் (5) வாய் வழியாக தண்ணீர் அதிகம் புகுந்ததால், மயக்கநிலைக்கு சென்றார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து திருவாடானை தாசில்தார் சேகர் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. படகு கரை திரும்பியபோது, ஒரு பக்கமாக அனைவரும் அமர்ந்து இருந்ததால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

DIED, BOAT, BOY, VACATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்