என்ன ஒரு புத்திசாலித்தனம்.. கூகுள் பே மூலம் வழிபறி.. நவீன டெக்னாலஜி திருடர்களுக்கு மறக்க முடியாத பரிசு
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம்: மரக்காணம் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவரை வழிமறித்த கும்பல் கூகுள் பே மூலம் பணம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் இரவில் யாராவது தனியாக பயணித்தால் செல்போன், கையில் கட்டிருக்கும் வாட்ச், செயினை தான் வழிப்பறி செய்வார்கள். காலை வேலைக்கு சென்று இரவு வீடு திரும்புவர்களிடம் நடக்கும் கொள்ளை குறித்து வீட்டில் கேட்டால் உயிர் தப்பிச்சதே பெரிசு என்பார்கள். ஆனால், தற்போது வழிப்பறியில் ஈடுபடும் கும்பலும் அப்டேட் ஆகியுள்ளனர். பணம் இல்லையென்றால் கூகுள் பே, போன் பே மூலம் பணம் கொள்ளையடிக்கும் காலமாக மாறிவிட்டது. அதேபோன்ற சம்பவம் மரக்காணத்தில் கல்லூரி மாணவரிடம் ஒரு கும்பல் இதே பாணியில் கொள்ளையடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சென்னையில் இருந்து ஈசிஆர் சாலை வழியாக கடலூர் நோக்கி மாணவர் பிரின்ஸ் காரில் சென்றார். அப்போது, மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரின்ஸை வழிமறித்துள்ளனர்.
அரசு பேருந்து பயணம் இனி இனிமையாகும்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட அதிரடி உத்தரவு
இவர் கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரின்ஸ் சென்ற காரை வழிமறித்துள்ளனர். பிரின்ஸ் சென்ற காரில் மேலும் 3 பேர் ஏறிக்கொண்டு மரக்காணம் நோக்கி சென்றனர். காரில் இருந்து இறங்கிய கும்பலில் 3 பேர் பிரின்ஸை மிரட்டிய காருடன் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் செல்லும் போது பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி சாலை அருகே வந்த போது அந்த கும்பல் காரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பிரின்ஸ் கையில் பணம் இல்லை என்று கூறியதும் கூகுள் பே மூலம் ஒரு நபருக்கு 10,000 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். ரூ.10,000ஐ பெற்று கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
என் வழி தனி வழி... என்னை சீண்டி பார்க்காதீங்க... .எதிர்க்கட்சிகளை விளாசிய இம்ரான்!
இதுகுறித்து பிரின்ஸ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் மரக்காணத்தை சேர்ந்த சேகர் பாபுவின் மகன் சவுபர் சாதிக், அஜித்குமார், பாலமுருகன், வினோத் உள்ளிட்ட 5 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சபரிமலை செல்பவர்களுக்கு 'புதிய அறிவிப்பை' வெளியிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு...!
- இனிமேல் 'கூகுள் பே'ல அதெல்லாம் 'சேவ்' பண்ணக் கூடாது...! - புதிய 'கட்டுப்பாடுகள்' குறித்து கூகுள் நிறுவனம்...!
- ‘என் மகள இப்படி ஆக்கிட்டாங்களே’... 'வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘மருத்துவமனையில் அளித்த பதைபதைக்க வைக்கும் வாக்குமூலம்’... ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’!
- 'தாய், பாட்டிக்கு கொரோனா'... 'கண்முன்னே உயிரிழந்த தந்தை'... 'செய்வதறியாது தனியாக தவித்த சிறுவனின்'... 'நெஞ்சை உருக்கும் சோகம்'!