'விஷத்தை' குடித்த 5 மாத கர்ப்பிணி... 'இறந்து' பிறந்த குழந்தை... அடுத்து 'நடந்த' பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஷத்தை குடித்த 5 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி துளசி (18) 5 மாத கர்ப்பிணியான இவருக்கும், ராஜேஷுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு துளசி தன்னுடைய தாய் வீடான அனுகரபள்ளிக்கு (பெங்களூரு) சென்று விட்டார்.

அங்கு தங்கியிருந்தபோது கடந்த 5-ம் தேதி பூச்சிமருந்தை துளசி குடித்துவிட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பதறியடித்து ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் துளசி சேர்க்கப்பட்டார்.

அங்கு 7-ம் தேதி காலை துளசிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்து போனது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி துளசி நேற்று காலை இறந்து போனார். இதுகுறித்து பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்