'தமிழகத்தில் மருத்துவர்களையும் விட்டுவைக்காத கொரோனா'... 'மனைவிக்கும் பரவிய சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவிற்கு எதிராக மருத்துவர்கள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கொரோனா தொற்றினால் அவர்களும் பாதிக்கப்ட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவர்கள், மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த பணியாளர்கள் இரவும், பகலுமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் எட்டு மருத்துவர்கள்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேபோன்று தூத்துக்குடியில் உள்ள மருத்துவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லி சென்று வந்ததால், அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மருத்துவராக பணியாற்றும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை அண்ணா நகரில் இயற்கை மருத்துவராக பணிபுரிந்த ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஈரோடு ரயில்வே மருத்துவமனை மருத்துவருக்கு, தாய்லாந்து நாட்டவருடன் தொடர்பில் இருந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த போது தொற்று ஏற்பட்டது. கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது குணமடைந்துள்ளார்.
மற்ற செய்திகள்
'மைனர் பெண்ணின்' திருமணத்தை தடுத்து நிறுத்திய 'புதுமாப்பிள்ளைக்கு' நேர்ந்த 'நடுங்கவைக்கும்' சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- 'மளிகை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...' 'உற்பத்தி இல்லாததால் தட்டுப்பாடு நிலவ வாய்ப்பு...' பொருட்களை 'வாங்கிக் குவிக்க' வேண்டாம் என 'வேண்டுகோள்...'
- 'என்ன நடக்குது அமெரிக்காவில்'?... 'ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி'...நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்!
- 'எதிர்ப்பு சக்தி எத்தனை நாட்கள் நீடிக்கும்...' 'கொரோனா எதிர்ப்பாற்றல்' குறித்து புதிய 'ஆய்வு முடிவு...' 'மருத்துவர்கள் விளக்கம்...'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- கடந்த 'ஆறு போர்களில்' இறந்தவர்களைவிட... 'கொரோனாவால்' அதிகமானோரை 'பறிகொடுத்த அமெரிக்கா...' 'பலி' எண்ணிக்கை '14 ஆயிரத்தைக்' கடந்தது...
- திருநிறைச் செல்வன் 'கொரோனா குமார்!' .. திருநிறைச் செல்வி 'கொரோனா குமாரி!'.. 'ஒரே மருத்துவமனையில்' பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட 'அசத்தலான' பெயர்கள்!
- “தங்கள் தாய்க்கும் அவரைப் போல்”.. ட்விட்டரில் வந்த வீடியோவுக்கு ரியாக்ட் செய்து நெகிழவைத்த தமிழக முதல்வர்!
- "உனக்கு கொரோனா வர..." நீதிபதியை பார்த்து சாபமிட்ட வழக்கறிஞர்... அதிர்ந்து போன நீதிபதியின் அதிரடி உத்தரவு...
- இருண்ட 'சுரங்கப்பாதையில்' சிறு வெளிச்சம்... கொரோனா 'கோரத்தாண்டவம்' ஆடிய... இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் 'தற்போதைய' நிலை என்ன?
- சுடர்விடும் 'வெளிச்சம்'... கொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... சகோதரியுடன் சேர்ந்து தப்பிய '9 மாத' பெண்குழந்தை!