‘அத்திவரதர் தரிசனத்திற்கு நின்றபோது’... ‘திடீரென மின்சாரம் பாய்ந்ததால்’... ‘பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு நின்று இருந்த பக்தர்கள் பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு, திடீரென மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில், நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய, புதன்கிழமையன்று நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரிசையில் குவிந்தனர். அத்திவரதரை தரிசிக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பாதுகாப்புப் பணியில் ஏற்கனவே 7500 போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், வரும் திங்கட் கிழமை முதல் மேலும் 5000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாலை 3.30 மணியளவில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதன்காரணமாக 20 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 5 பேர் காயமடைந்து அங்குள்ள தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பக்தர்களை மின்சாரம் தாக்கியதால், ஒருவித பரபரப்பு சூழல் அங்கு சிறிதுநேரம் நிலவியது. இதற்கிடையே, அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரும் 13,14,16 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

KANCHEEPURAM, ATHIVARATHAR, POWER, ELECTRICITY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்