‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சரவணன், அவருடைய மனைவி வசந்தி மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை பிரிஜன் ஆகியோருடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்துள்ளார். காரை ராஜேந்திரன் என்பவர் ஓட்ட உடன் சரவணனின் உறவினர்களான கேசவன், கண்ணம்மாள் ஆகியோரும் இருந்துள்ளனர்.
கார் எருமைப்பட்டியை அடுத்த வரகூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் சரவணன், குழந்தை பிரிஜன், ராஜேந்திரன், கேசவன், கண்ணம்மாள் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த வசந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எருமைப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- ‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..! வைரல் போட்டோ..!
- ‘உணவைத் தேடிப்போன இடத்துல’... ‘கார் டயரின் நடுவில் சிக்கி’... ‘நாய்க்கு நிகழ்ந்த துயரம்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘ப்ளஸ் 1, 2 மாணவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்’... ‘பொறியியலா? மருத்துவமா?’... ‘பாடத்திட்டமுறையில் அதிரடி மாற்றம்’
- ‘கண் இமைக்கும் நேரத்தில் காரும் லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’..
- 'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்!
- ‘தாய்க்கும் 3 மாத பெண் குழந்தைக்கும் நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’.. ‘கணவர் செய்த கொடூரம்’..
- ‘2 மகள்களையும் தூக்கிக்கொண்டு போய்’.. ‘மதுபோதையில் தந்தை செய்த காரியம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- ‘எல்லாமே சந்தோஷமாத்தான் போச்சு’... ‘கணவரிடமிருந்து வந்த வாய்ஸ் மெசேஜ்’... 'அதிர்ந்துப்போன மனைவி’!