'பதுக்கி வச்சு அங்கெல்லாம் சேல் பண்றங்க...' '144 தடை உத்தரவையும் மீறி மது விற்பனை...' போலீசார் விரைந்து நடவடிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலிலும் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அவற்றைக் திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரானோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டுத் தனமாக விற்க முயன்ற நான்காயிரம் மதுபாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் கமுதியைச் சேர்ந்த ஒரே நபரிடமிருந்து 600-க்கும் அதிமான மதுபாட்டில்கள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 21 நாள் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மதுபானப் பிரியர்கள் மது அருந்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிலர் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ஆர்.எஸ். மங்களம், திருவாடானை என அனைத்துப் பகுதிகளிலும் கள்ள மது விற்பனை தடையின்றி நடந்து வருகிறது.
இது குறித்த புகார்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குச் சென்ற நிலையில் தனிப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். இதன் காரணமாக கடந்த 3 நாள்களில் மட்டும் கள்ளத்தனமாக மது விற்றவர்கள் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 3,954 மது பாட்டில்கள் இதுவரை கைப்பற்றப் பட்டுள்ளது. இதில் கமுதியில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஒரே நபரிடம் இருந்து 647 மது பாட்டில்கள் கைபற்றப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதல்ல டிஸ்டன்ஸ், அப்புறம் தான் சரக்கு... ஒரு மீட்டர் இடைவெளியில் நீண்ட வரிசையில் நின்று... சுகாதாரத் துறையின் அறிவுரைப்படி நடக்கும் பொறுப்பான 'குடி'மகன்கள்...!
- 'அவங்க 4 பேரும் ஃபுல் மப்புல வந்தாங்க...' 'கார்ல தான் பிக்கப் பண்ணிருக்காங்க...' 'சரக்கு வாங்கி கொடுத்தது யாருன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு...' பின்னி பெடலெடுத்த சம்பவம்...!
- 'வீட்டிலேயே பாட்டில், மூடி, ஸ்டிக்கர்லாம் ரெடி பண்ணியாச்சு...' 'ஸ்பிரிட் வாங்க போன டைம்ல தான் வசமா...' கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்...!
- 'தண்ணி மெதுவா வரும்னு பாத்தா... மதுவா வருது!'... பீதியடைந்த குடியிருப்பு வாசிகள்... திகைப்பூட்டும் சம்பவத்தின் பின்னணி என்ன?
- 'ஹலோ.. நூறா?'.. 'இங்க கொஞ்சம் வந்து, இந்த ஐட்டத்தை வாங்கித் தர்றீங்களா?'.. இளைஞர் கேட்ட 'வேறலெவல்' உதவி!
- 'தீபாவளி தினம் முதல் 4 நாட்களுக்கு'... 'இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘மதுக்கடைகள் மூடல்’... ‘வெளியான அறிவிப்பு’!
- 'சொன்னதை எல்லாம் செய்றாரே'...'அடுத்த அதிரடியை தொடங்கிய ஜெகன் மோகன்'!