'அண்டாவில்' ஊற்றப்பட்ட 'வெந்நீர்'... 'அலறல்' சத்தம் கேட்டு பதறி ஓடிய 'தாய்'... 'நொடியில்' நிகழ்ந்த 'விபரீத' சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரியபாளையம் அருகே வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவைச் சேர்ந்த கஜேந்திரன்- குப்பம்மாள் தம்பதியினரின் 4 வயது மகள் நித்தியஸ்ரீ.
குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க செய்வது வழக்கம். வழக்கம்போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி விட்டு சமையலறைக்கு கேஸ் அடுப்பை ஆஃப் செய்ய சென்றார். அப்போது அண்டா அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நித்தியஸ்ரீ வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்தாள். இதில் அவள் அலறி துடித்தாள்.
சத்தம் கேட்டு பதறித் துடித்து வந்த குப்பம்மாள் குழந்தை நித்தியஸ்ரீயை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நித்தியஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘16 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட’.. ‘7 வயது சிறுமிக்கு நேர்ந்த நெஞ்சை உருக்கும் சோகம்’!
- குழந்தைக்கு தடுப்பூசி போட்ட செவிலியர்... டாக்டரை ஆலோசிக்காததால் நேர்ந்த விபரீதம்... கதறித் துடித்த பெற்றோர்...
- கோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..!’.. வெளியான பகீர் தகவல்..!
- ‘தனியாக வீட்டில் இருந்த செவிலியருக்கு’... ‘நிகழ்ந்த பயங்கரம்’... 'மகளிர் நீதிமன்றம் கொடுத்த'... 'அதிகபட்ச தண்டனை'!
- 'குழந்தைகள் விற்பனை வழக்கில்... திடீர் திருப்பம்... போலீஸார் தீவிர விசாரணை!'
- ‘அழுதுகிட்டே வீட்டுக்கு வந்த 5 வயசு சிறுமி’.. பதறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போன தாய்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!
- ‘சமையல்காரங்க ஹெட்போன் மாட்டிருந்தாங்க!’.. பள்ளி மதிய உணவு பாத்திரத்தில்.. விழுந்து 3 வயது குழந்தை பலி!.. கதறிய தந்தை!
- “அடுத்தடுத்து உயிரிழந்த 17 ஆடுகள்”... “காப்பாற்றப் போனவரின் மாட்டுக்கும் நேர்ந்த சோகம்!”.. பதறவைத்த சம்பவம்!
- ‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..!
- 'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்!'...