மாரியம்மனை தரிசிக்க சென்ற 4 பெண்களுக்கு நேர்ந்த சோகம்.. நடுக்காட்டில் நடந்த துயரம்.. உதகையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆனிக்கல் மாரியம்மனை தரிசிக்க சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல்போன சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பீச்-ல கிடந்த பாட்டிலை கண்டுபிடிச்ச அம்மா.. உள்ளே இருந்த லெட்டரை மகன் கிட்ட காட்டும்போது தெரியவந்த விஷயம்.. எல்லோரும் ஒருநிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க..!

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஆனைகட்டி அருகே அமைந்துள்ளது ஆனிக்கல் மாரியம்மன் திருக்கோவில். இந்தக் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். கோவிலுக்கு செல்லும் வழியில் கெதறல்லா ஆறு ஓடுகிறது. இதனை கடந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று இருக்கின்றனர்.

பூஜை முடிந்து அவர்கள் திரும்பும் போது தொடர் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சரோஜா, வாசுகி, விமலா மற்றும் சுசீலா ஆகிய நான்கு பெண்கள் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. உடனடியாக இதுகுறித்து காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பெண்களை தேட துவங்கினர். அத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருந்த பக்தர்களை அதிலிருந்து மீட்கும் பணியிலும் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை வரையில் மீட்புப்படையினர் காணாமல்போன பெண்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். 3 குழுக்களாக மொத்தம் 60 பேர் காணாமல்போன பெண்களை மீட்க போராடினர். அப்போது, சரோஜா மற்றும் வாசுகி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மேலும், இரண்டு பெண்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பெண்களின் உடல்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டதாக மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கார்த்திகை தீப பூஜையில் கலந்துகொள்ள சென்றிருந்த பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழத்தியுள்ளது.

Also Read | "தல ஒரு ஆட்டோகிராஃப்".. ரசிகர் வச்ச கோரிக்கை.. நெகிழ வச்ச தோனி.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ..!

WOMEN, WOMEN MISSING, ANIKKAL RIVER, OOTY, COPS, SEARCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்