'இ-பாஸ்' வாங்காம 'ஊர் பக்கம்' போய்டாதிங்க... 'சென்னையிலிருந்து திருப்பூருக்கு போன...' '4 பேருக்கு' நேர்ந்த கதி...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வாடகை காரில் வந்த 4 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களை இணைத்து மண்டலங்களாக அறிவித்து பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட போதிலும், சென்னை உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு செல்வதற்கும், அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மாத பெண் குழந்தை, 19 வயது இளம்பெண், 16 வயது சிறுவன், 25 வயது இளம்பெண் ஆகிய 4 பேர் சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் திருப்பூருக்கு வாடகை காரில் வந்துள்ளனர்.
இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் குணசேகரன் எம்.எல்.ஏ.விற்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த 4 பேரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ திட்டமிட்ட மடகாஸ்கர் ‘மந்திரி’.. மிரள வைத்த ‘காரணம்’!
- 'தமிழகத்தில்' பரவும் 'தீவிரத்தன்மை' கொண்ட... 'புதிய வகை' கொரோனா வைரஸ்... இது 'வூகானிலிருந்து' பரவியது இல்லை...
- சத்தமின்றி தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொரோனா!.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் 269 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!.. ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று உறுதி!.. முழு விவரம் உள்ளே
- "மூன்று அடுக்கு முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்!".. ஏன்?.. உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு கருத்து!
- 'சென்னை'யை பொறுத்தவரை... 'இந்த' 16% தெருக்களில் தான் கொரோனா உள்ளது!
- இந்தியா முழுவதும்... பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' எப்போது திறக்கப்படும்?
- 'சென்னை'யில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'ஆண்களுக்கு' பாதிப்பு... குறிப்பா 'இந்த' வயசுக்காரங்கள தான் அதிகம் தாக்குதாம்!
- அதெல்லாம் சும்மா 'வதந்தி' யாரும் நம்பாதீங்க... 'ஹோட்டல்' உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!
- "கொரோனா நோயாளிகளை" .. 'இதுக்காச்சும் அனுமதிங்க!'.. 'வேற லெவல்' லெட்டருடன் களமிறிங்கிய டாக்டர்கள் சங்கம்!