நம்பி வந்த பொண்ணுக்கு நேர்ந்த 'கதி'... இனி ஜெயில்தான் கடைசி வரை... இப்படி ஒரு 'தீர்ப்பத்தான்' எதிர்பார்த்தோம்... மக்கள் மகிழ்ச்சி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக டில்லியில் இருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்த அவர்  நள்ளிரவு 11 மணிக்கு மேலானதால் விடுதி அறையில் தங்குவதற்கு திட்டமிட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறினார்.

பணத்திற்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணத்தை சுற்றி வலம் வந்தார். நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு செல்லாமல் ஆட்டோ டிரைவர் சுற்றி வந்ததால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தோழிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதற்கிடையே கும்பகோணம் செட்டி மண்டபம் பை-பாஸ் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு விட்டு ஆட்டோ டிரைவர் சென்று விட்டார்.

அப்போது அந்த பெண்ணை குடிபோதையில் இருந்த 4 வாலிபர்கள் ஓட்டல் அறையில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றனர். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.. அதனை தங்கள் செல்போன்களில்  4 பேரும் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி ஹோட்டலில் இறக்கி விட்டு  தப்பிச்சென்றனர்.

இதுபற்றி தோழிகளிடம் அந்த பெண் கூறினார். அவர்கள் தனியார் வங்கி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். வங்கி அதிகாரிகள் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர்கள் அன்பரசு, தினேஷ், புருஷோத்தமன், வசந்த் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. அந்த இளம்பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றது ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி என்று தெரிந்தது.

ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆட்டோ டிரைவர் தவிர மற்ற 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இன்று காலை தஞ்சை மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி பரபரப்பான தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் தினேஷ், புருஷோத்தமன், வசந்தகுமார், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும்  4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். ஆட்டோ டிரைவர் குருமூர்த்திக்கு தலா 7 ஆண்டுகள் வீதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

கொடுமையான தண்டனை புரிந்த 4 பேரும் தண்டனை காலம் முழுவதும் இயற்கை மரணம் அடையும் வரை சிறையிலேயே அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

SENTENCED, IMPRISONMENT, HARASSMENT, DELHI GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்