மனவளர்ச்சி குன்றிய ‘15 வயது சிறுமி கர்ப்பமெனக் கூறிய டாக்டர்கள்’.. ‘அதிர்ந்துபோய் நின்ற தாய்’.. ‘விசாரணையில் வெளிவந்த உண்மை’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் அவருடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அவர்கள் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடும் நிலையில் சிறுமி தனது தாத்தாவின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படுவதைக் கண்ட அவருடைய தாய் சிறுமியை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் டி.செல்வராஜ் (51), முத்து (57), ராமராஜ் (45), பி.செல்வராஜ் (49) ஆகிய 4 பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ள போலீஸார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை’.. ‘அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்’..
- ‘ஹெல்மெட் போடலனு நிறுத்தினாங்க’.. ‘என் வண்டிகூட அவ்ளோ விலை இல்லை’.. ‘அபராத ரசீதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்ற இளைஞர்’..
- ‘சாதி மாறி காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரை நிர்வாணமாக்கி’.. ‘உறவினர்கள் ஒன்றுகூடி செய்த கொடூரம்’..
- ‘குடும்பமே இறந்து கிடந்த பயங்கரம்’.. ‘14 வயது சிறுவன்’ அளித்த ‘உறைய வைக்கும் வாக்குமூலம்’..
- ‘கொன்று நன்றி தெரிவித்துவிட்டனர்’.. ‘சேவை செய்த மருத்துவருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘கல்லூரிக்கு போகும்போது’... ‘மாணவிக்கு நேர்ந்த கோரம்’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’!
- ‘ஒண்ணாம் வகுப்பு மாணவிக்கு’... ‘சக மாணவனால் நேர்ந்த கொடூரம்’... 'அதிர்ச்சியில் உறைந்த தாய்’!
- ‘பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்’.. ‘தனியார் மருத்துவமனையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..
- ‘6 மணி நேரமாக வலியில் துடித்தும்’.. ‘உதவாமல் வேடிக்கை பார்த்த கொடூரம்’.. ‘கர்ப்பிணிக்கு நடந்த பரிதாபம்’..
- சுங்கச் சாவடியில் ‘பெண் ஊழியரிடம்’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. வைரலாகும் வீடியோ..