திருவண்ணாமலையில் குகைக்குள் பதுங்கியிருந்த ‘சீன நபர்’.. ‘வனத்துறையினர் அதிரடி’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவண்ணாமலையில் குகைக்குள் பதுங்கி இருந்த சீன நபரை போலீசார் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையில் வெளிநாட்டு நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வனத்துறையினர் நேற்று முன்தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சீன நாட்டைச் சேர்ந்த 35 வயது யங்ரூயி என்ற இளைஞர், கடந்த 11 நாட்களாக மலை குகையில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், மலையில் இருந்து கீழே கொண்டு அழைத்துவரப்பட்டு, திருவண்ணாமலை ரமண ஆசிரமம் முன்பு உள்ள சிறப்பு உதவி மையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவர் திருவண்ணாமலை அருகே அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி சேகரித்து, கோரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீன இளைஞர் எதற்காக திருவண்ணாமலை வந்தார்? குகைக்குள் எதற்காக தங்கியிருந்தார்? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்