எந்தெந்த 34 வகை கடைகள் இன்று முதல் இயங்கும்??.. எவை இயங்காது? விரிவான பட்டியல் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (மே 11) முதல் 34 வகையான கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
டீ கடைகள்(பார்சல் மட்டும்), பேக்கரிகள்(பார்சல் மட்டும்), உணவகங்கள்(பார்சல் மட்டும்), பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்ட், ஹார்டுவேர், சானடரிவேர் விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் (Household appliances), மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள், ஊரகப் பகுதிகளில் மட்டும் சிறிய நகைக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை), ஊரகப் பகுதிகளில் மட்டும் சிறிய ஜவுளிக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை), மிக்ஸி & கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள், பெட்டிக் கடைகள் பர்னிச்சர் கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகங்கள், கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள், டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரிகல் கடைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள், நர்சரி கார்டன்கள், மரக்கட்டைகள் மற்றும் பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகளை இயக்கலாம் என்றும் ஊரடங்கு தளர்வில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள்/ கடைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் அதே சமயம் சலூன், ஸ்பா, அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய்த்தொற்று தன்மையை பொறுத்து வரும் காலங்களில் பல்வேறு பணிகளுக்கு/கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள் குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வலியுறுத்துவதோடு கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாடு சவக்காடா மாறிக்கிட்டு வருது!".. "கொரோனாவுக்கு எதிரா ட்ரம்ப் எடுக்குற நடவடிக்கைலாம்".. கொந்தளித்த ஒபாமா!
- கொரோனாவால் 'முதல் தூய்மைப் பணியாளர்' சென்னையில் 'உயிரிழப்பு'!..'தமிழகத்தில்' 45-ஆக 'உயர்ந்த' பலி 'எண்ணிக்கை'!
- 'கொரோனா முடக்கத்துக்கு பின்.. அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் முதல் விமானம்'.. தாயகம் திரும்பும் நெகிழ்ச்சியில் 'சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் கூடிய பயணிகள்!'
- "இதுக்கு நீங்கள்தான் தகுதியானவர்கள்!".. கனடா பிரதமரின் 'மாஸ்' அறிவிப்புக்கு குவியும் 'நெகிழ்ச்சி' பாராட்டுகள்!
- '127 பேரிடம்' நடத்தப்பட்ட 'சோதனையில் வெற்றி...' 'ஆரம்ப கட்ட' நோயாளிகளை 'குணப்படுத்தி விடலாம்...' 'ஹாங்காங் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை...'
- 'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
- 'அந்த' நிலை இங்கு வராது... தொடர்ந்து 'உயரும்' பாதிப்புக்கு இடையே... 'ஆறுதல்' தரும் தகவல்களுடன் சுகாதாரத்துறை மந்திரி 'நம்பிக்கை'...
- கொரோனா 'ஊரடங்கால்' பரவும் 'மற்றொரு' அபாயம்... 5 ஆண்டுகளில் 'உயிரிழப்பு' மட்டும்... வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...
- 'வெள்ளை மாளிகையில் வேத மந்திரம்...' 'எப்படியாவது நன்மை நடந்தால் சரி...' 'சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த ட்ரம்ப்...'
- "சீனாதான் வைரசை பரப்பியது..." 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'