'தெருவில்’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... ‘3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் அருகே காய்கறி விற்கும் மினி வேன் ஏறியதில், 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, விளந்தை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தன் - ருக்குமணி தம்பதியினர். இவர்களுக்கு, 3 வயதில் போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த குழந்தை தனது வீட்டின் அருகே, தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சாலையில், காய்கறி விற்பனை செய்யும், மினி சரக்கு வேன் ஒன்று வந்துள்ளது. வாகனத்தை தெருவில் நிறுத்திவிட்டு, காய்கறி வியாபாராத்தில், வியாபாரி ஒருவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
அந்த வாகனத்தின் முன்பகுதியில், சிறுமி போர்ஷிகா விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை கவனிக்காத ஓட்டுநர் திருமலை (30) வாகனத்தை எடுக்க முயன்றபோது, முன்னாள் இருந்த டயரில் சிறுமி சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார், வழக்குப்பதிவுசெய்து, ஓட்டுநர் திருமலை என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '40 அடி ஆழம்'...48 மணி நேரம்...'60 வயது' பாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!
- ‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..
- 'திடீரென எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு'...'கட்டுப்பாட்டை இழந்த பேருந்து'...17 பேரை காவு வாங்கிய கோரம்!
- ‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..
- ‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..
- 'நிக்க மாட்டீங்க?'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி!'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'!
- ‘தடுமாறி விழுந்த இளம்பெண்’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் வீடியோ’..
- 'தங்கையின் திருமண ஏற்பாடுகளை கவனித்தபோது’... 'அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்'!
- ‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..
- ‘சென்னையில் வாகன சோதனையின்போது’.. ‘விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..