‘சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை பலியான சம்பவம்’! இரண்டு பேரை கைது செய்த போலீசார்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தந்தையுடன் பைக்கில் சென்ற குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி பலியான சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஏழுகிணறு கிருஷ்ணப்பக் குளத் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அபினேஷ்வரன் (3). நேற்று (03.11.2019) மாலை கோபால் தனது மகனை அழைத்துக்கொண்டு கொருக்குபேட்டையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மேல் வந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் பைக்கில் முன்னாடி அமர்ந்திருந்த குழந்தை அபினேஷ்வரன் கழுத்தில் சிக்கியுள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த நூல் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளது. இதனைப் பார்த்த கோபால் உடனே பைக்கை நிறுத்திவிட்டு கதறு அழுதுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அபினேஷ்வரனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.தந்தை கண்முன்னே 3 வயது குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குபேட்டையை சேர்ந்த நாகராஜன் (20) மற்றும் 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சென்னை காசிமேடு ஏஜே காலனி பகுதியில் நேற்று மாலை மாடியில் காத்தாடி விட்ட சார்லஸ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து காத்தாடிகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சென்னையில் போலீஸாரால் விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘தூக்க கலக்கம்’... ‘லாரி மீது மோதிய அரசுப் பேருந்து’... ‘அலறிய பயணிகள்’... '15 பேருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘சென்னையிலிருந்து கோவைக்கு’... 'காரில் திரும்பியபோது'... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!
- ‘வேலை செய்த வீட்டில்’... ‘5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!
- ‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'!
- 'மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு'... விவரம் உள்ளே!
- ‘கூட்டாளிக்கு மதுபாட்டில், பிரியாணி’.. ‘ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பூசாரி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
- ‘திடீரென பற்றிய தீ’.. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..! அதிர்ச்சி சம்பவம்..!
- ‘13 வயது சிறுமி கொலையில்’... ‘அத்தை மகன் அளித்த’... 'அதிர்ச்சி வாக்குமூலம்'!
- ‘கரை ஒதுங்கிய இன்ஜினியரிங் மாணவர் உடல்’.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!