‘காரில் உறவினர்களுடன் போனபோது’... ‘கண் இமைக்கும் வினாடியில்’... ‘நடந்து முடிந்த பயங்கரம்’... '3 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தருமபுரி அருகே மருத்துவ சிசிச்சைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் என்பவரின் மனைவி சத்தியவாணி (61). இவரது மகன் கோபிநாத், தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக, திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இதனால், சத்தியவாணி தனது மகனுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததால், வேலூர் மருத்துவமனை ஒன்றில் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வருவார்.
வழக்கம்போல் சிகிச்சை பெறுவதற்காக, சத்தியவாணி, அவரது தங்கை அன்புமணி (58) மற்றும் மகள் கவிதா(40) ஆகியோருடன் காரில் சென்றனர். காரை ரமேஷ் (40) என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் திருப்பூருக்கு திரும்பி கொண்டு இருந்தபோது, தருமபுரி அருகே தொப்பூர் கணவாயில், பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, திடீரென கார் மீது மோதியது.
இதில் பின் இருக்கையில் இருந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநர் ரமேஷ் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சபரிமலைக்கு’ செல்ல முயன்ற ‘பெண் மீது’.. ‘மிளகாய் பொடி ஸ்ப்ரே’ அடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..
- ‘எப்படி போய் மாட்டியிருக்கு!’.. ‘தாறுமாறாக பறந்த விமானம்’.. உயர் மின்னழுத்த கம்பிகளில் ‘சிக்கியதால்’ பரபரப்பு..
- Video: ‘டிராஃபிக்கை கண்ட்ரோல் செய்தபோது’... ‘நொடியில்’... 'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த சோகம்'... ‘பதறவைத்த சிசிடிவி காட்சிகள்’!
- ‘பலமுறை கூறியும் கேட்காத கணவர்’... '2 குழந்தைகளுடன்'... 'இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'...!
- அசுர வேகத்தில்.. 'ராயல் என்பீல்ட்' பைக் மீது மோதிய... பிஎம்டபிள்யூ கார்.. 'நொடியில்' இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
- ‘தலைப்பிரசவம்’!.. ‘2 தலை, 3 கைகள், 4 உள்ளங்கையுடன் பிறந்த குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!
- ‘11 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஒரு ஆண் குழந்தை கூட இல்லை’ பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைச்ச பரிசு..!
- ‘நான் பிறந்தபோதே இப்படி தான் இருந்தேன்’...‘மூடநம்பிக்கை கொண்ட அக்கம்பக்கத்தினரால்’... ‘மூதாட்டிக்கு நிகழும் சோகம்’!
- திடீரென ‘குடியிருப்பு பகுதிக்குள்’ விழுந்து நொறுங்கிய ‘விமானம்’.. ‘27 பேர்’ பலியான பயங்கரம்..
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..