Cool Suresh : “தமிழ்நாட்டுக்கு 3 தளபதி.. 2 சூப்பர் ஸ்டார்.. கமெண்ட்ல திட்டுறவங்க கூகுள்ல போய் பாருங்க”! - கூல் சுரேஷ்.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெள்ளி கிழமை நாயகன், யூடியூப்பர்ஸ் சூப்பர் ஸ்டார் என தமது ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் கூல் சுரேஷ்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | ‘வாரிசு’ படத்தை தொடர்ந்து மீண்டும் பிஸியான ஷாம் .. அடுத்ததாக இணையும் பிரபல இயக்குநர் இவரா?

சில திரைப்படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷ், ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், தியேட்டர் வாசலில் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து  விளம்பரம் செய்து ட்ரெண்ட் ஆனவர்.  இவர், சென்னையில் பி.வி.ஆர் சினிமாஸ் நிறுவனத்தின் புதிய திரையரங்கு திறப்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடையே அவர் பேசும்போது, “தமிழ்நாட்டுக்கு மூன்று தளபதி. ஒருவர் தளபதியாய் தமிழகத்தின் அரசியலில் (முதல்வர்)இருக்கிறார். இன்னொருவர் சினிமாவில் (விஜய்) இருக்கிறார். அடுத்ததாக மூன்றாவது தளபதி நான். யூடியூபில் இருக்கிறேன். இதே போல் சூப்பர் ஸ்டார் திரையுலகில் இருக்கிறார். youtube சூப்பர் ஸ்டார் என்று என்னை பலரும் அழைக்கின்றனர். இவற்றைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இன்னும் கமெண்ட்களில் இது குறித்து என்னை திட்டுபவர்கள் இருக்கிறீர்கள், அவர்கள் தயவு செய்து கூகுளில் தேடிப் பார்க்கலாம்.

நான் சினிமாவிற்கு வருகிறேன். படம் பார்க்கிறேன். அது பற்றி பேசுகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் என் நிலைமை மோசமாகவே இருக்கிறது. எனக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர். சந்தானம் போன்ற சில நண்பர்களால் குழந்தைகளின் படிப்பு செலவுகள் உள்ளிட்ட உதவிகள் கிடைக்கின்றன. ஆனால் மேற்கொண்டு திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்தாலோ சினிமா கை கொடுக்கவில்லை என்றாலோ,  நான் தியேட்டர் வாசலில் பிச்சைதான் எடுக்க வேண்டும்.

கொத்தனார் வேலைக்கு அல்லது பெயிண்டர் வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன். வரும் 17ஆம் தேதி பகாசூரன் திரைப்படம் வெளியாகிறது. அந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன். அது எப்படி வரப்போகிறது என்பது தெரியவில்லை. அந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் சிறப்பாக வந்திருந்தால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். திரையரங்குக்கு வெளியே இருக்கிறேனா, இல்லை திரையரங்குக்குள் சென்று டார்ச் லைட் அடித்து அனைவரையும் சீட்டில் அமரச் சொல்லும் ஊழியராக வேலை பார்க்கப் போகிறேனா அல்லது திரையிலேயே தோன்றப் போகிறேனா என்பது தெரியவில்லை” என்று பேசினார்.

Also Read | Cool Suresh : அந்த படம் மட்டும் வொர்க் அவுட் ஆகலனா சினிமாவ விட்டே போயிடுவேன்..! - கூல் சுரேஷ் உருக்கம்.

COOL SURESH, THALAPATHY, SUPER STAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்