தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா!.. மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்வு! அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

இந்திய பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, நாடு முழுவதும் முக்கிய மாநிலங்களும், முக்கிய மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை,காஞ்சிபுரம் ஈரோடு மாவட்டங்களில் லாக்டவுன் எனப்படும் தனிமைப்படுத்தப்படும் முறை கையாளப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள், வணிகவளாகங்கள் , திரையரங்குகள் செயல்படாது என்றும் நாளை மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதே சமயம் மளிகை, காய்கறி, மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான சேவை இருக்கும் என்றும் தெரிகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்களுள் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லண்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் உட்பட 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக

விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இந்த 3 பேரில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் , 48 வயதான திருப்பூரைச் சேர்ந்த ஆண் நபர் திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும், 54 வயதான மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஆண் நபர் ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதொடும் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

COVID19, CORONAVIRUSUPDATE, CORONAVIRUSOUTBREAK, VIJAYABASKAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்