தமிழகத்தில் கொரோனா பரவிய 'முதல்' நபர்... இந்த '10 மாவட்டங்களில்' பாதிப்பு அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாடு எதுவும் செல்லாத மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், '' தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மதுரையை சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் வெளிநாடு எதுவும் செல்லவில்லை. அவர் தமிழகத்தில் கொரோனா பரவிய முதல் நபர் ஆவார்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருக்கிறது. 1 கோடி மாஸ்க்குகள் மற்றும் 500 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். மேலும் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்,'' என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்