‘நள்ளிரவில்’ கேட்ட குழந்தையின் ‘அழுகுரல்’... கணவன், மனைவி உட்பட ‘3 பேருக்கு’ நேர்ந்த கொடூரம்... தப்பிய ‘இளைஞர்களை’ மடக்கிப் பிடித்த போலீசார்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் 3 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.
சேலம் திருமலைகிரி செம்மண்திட்டைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய வெள்ளிப் பட்டறையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ், அவருடைய மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி குமார் ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். ஆகாஷ் - வந்தனா தம்பதிக்கு 6 மாத குழந்தை ஒன்று உள்ள நிலையில், அவர்கள் சன்னிகுமாருடன் தங்கராஜுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு அவர்களுடைய வீட்டிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்க, அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வந்தனாவும், வீட்டின் பின்புறம் ஆகாஷ், சன்னிகுமார் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆகாஷுடைய வீட்டிற்கு அருகே வசித்துவந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சம்பவத்தன்று தப்பியோடும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்துள்ளது. அதைவைத்து அவர்கள் இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவர்களுடைய வீட்டை சோதனை செய்தபோது அங்கு மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்துள்ளன.
அதைவைத்துப் பார்க்கும்போது மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வினோத், தினேஷ், சுராஜ், விஜி என்ற அந்த 4 இளைஞர்களும் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் ரயிலில் ஏறித் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட, இன்று அதிகாலை பாலக்காடு ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வெளியே சென்றுவிட்ட பாட்டி’.. வழக்கத்துக்கு மாறாக குளிப்பாட்டிய இளம் தாய்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
- 'கர்ப்பிணி மகளின் கண்முன்னே'... 'காதல் கணவர் கொலை'... 'ஜாமீனில் வெளியே வந்த'.. 'குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை'... 'கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த அதிர்ச்சி முடிவு'!
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...
- ‘ரூ 7.5 கோடி’ செலவு செய்து.. ‘40 அடி’ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘முக்கிய’ ஆதாரம்... நரேந்திர தபோல்கர் ‘கொலை’ வழக்கில் ‘தீவிரமடையும்’ விசாரணை...
- ‘நேர்ல உங்கள பாக்கணும்’... ‘திருமணத்திற்கு’ முன் போன் செய்த ‘இளம்பெண்’... நம்பிச் சென்ற ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த பரிதாபம்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்!...
- 'புதுமாப்பிள்ளையை துடிக்கவிட்டு கொன்ற மச்சான்'...'இதான் காரணமா'...ஒரு நிமிஷம் ஆடிப்போன போலீசார்!
- ‘பிறந்து 30 நாட்களே ஆன பெண் சிசு’... ‘பெற்றோர், தாத்தாவால் நடந்தேறிய கொடூரம்’... ‘உறைய வைக்கும் சம்பவம்’... ‘மு.க.ஸ்டாலின் வேதனை’!
- நின்றுகொண்டிருந்த பேருந்தில்... ‘ரூ 3 கோடி’ நகைகள் கொள்ளை... ‘திருடர்கள்’ வழியிலேயே சென்று... ‘ஸ்கெட்ச்’ போட்டு ‘மீட்ட’ போலீசார்...
- 'கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்வு'... '6 மாநிலங்களுக்கு'... 'மத்திய அரசு எச்சரிக்கை'!