‘வெளியே சென்றுவிட்ட பாட்டி’.. வழக்கத்துக்கு மாறாக குளிப்பாட்டிய இளம் தாய்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த 30 வயதான சரவணன் கருப்பன்பட்டியை சேர்ந்த 25 வயதான கலாவதி என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு 2 வயதில் யுவஸ்ரீ என்கிற குழந்தையும்,  மூன்று மாதத்தில் மோனிஷா என்கிற பெண் குழந்தையும் உள்ளனர்.

‘வெளியே சென்றுவிட்ட பாட்டி’.. வழக்கத்துக்கு மாறாக குளிப்பாட்டிய இளம் தாய்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் சரவணன் பெங்களூரில் இருக்க இதனிடையே தனது குழந்தைகளுடன் கட்ட கருப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் கலாவதி வசித்து வந்துள்ளார் மூன்று மாத குழந்தையான மோனிஷா சிறு குழந்தை என்பதால் கலாவின் தாயார்தான் அவரை குளிப்பாட்டுவது வழக்கம்

இந்நிலையில் தனது தாயார் வெளியே சென்றுவிட்டதால் கலாவதி தனது 3 மாத குழந்தை மோனிகாவை குறித்து வைத்துள்ளார் அப்போது குழந்தை மூச்சடைத்து அமைதியாகி விட்டதாகவும் அதன் பிறகு குழந்தையை தூக்கிக்கொண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்ற என் மகள் மோனிஷா பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை மோனிஷா இறந்துவிட்டதாகவும் தெரிவித்ததாக  கூறப்படுகிறது.

இதனை அடுத்து குழந்தையுடன் உசிலம்பட்டியில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

BABY, CHILDREN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்