மொத்த ஆழம் 600 அடி.. 100 அடிக்கும் கீழே சென்ற குழந்தை.. தொடரும் மீட்புப்பணி.. 'குழிக்குள்' இறங்கும் வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தீயணைப்பு வீரர்களை  உள்ளே அனுப்ப தேசிய பேரிடர் மீட்பு படை முடிவு செய்துள்ளது.

ஆழ்துளை கிணற்றுக்குள்  24 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை சுஜித் சிக்கி தவித்து வருகிறான். தற்போது குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கயிறுகட்டி குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்த முயற்சிகளை மிகவும் கவனமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் செய்து வருகின்றனர்.

மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவுடன் என்எல்சி மற்றும் ஓஎன்சிஜி குழுக்கள் கைகோர்த்துள்ளது. இவர்கள் ரிக் வண்டி எனப்படும் போர்வெல் அமைக்கும் கருவி மூலம் சுஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றின் அருகே சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே சில மீட்டர் தள்ளி 1 மீ ஆழம் மற்றும் அகலத்தில் சுரங்கம் தோண்டி அதை குறுக்காக ஆழ்துளை கிணற்றுடன் இணைக்கப்படவுள்ளது. பின்னர் அதில் ஒரு தீயணைப்பு வீரரை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சில மணிநேரங்கள் தேவைப்படும் என்பதால் சுஜித்தை மீட்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் என்எல்சியின் கருவி மூலம் புதிய குழி தோண்டி குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தீவிரம். குழியில் இறங்க 3 தீயணைப்பு வீரர்கள் தயார் என தெரிவித்து இருக்கிறார். இந்தநிலையில் குழந்தை தற்போது  100 அடிக்கும் கீழே சென்று விட்டதாக கூறப்படுகிறது. 26 மணி நேரங்களுக்கு மேலாக மீட்புப்பணி தொடர்ந்து வருகிறது. குழந்தை சுஜித் விரைவில் மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுடன் இணைந்து நாமும் பிரார்த்திப்போம்!

மீண்டுவா சுஜித்!..

SURJITH

மற்ற செய்திகள்