'தங்கச்சிய' லவ் பண்ணேன்... என்ன 'கல்யாணம்' பண்ணிக்கன்னு டார்ச்சர் பண்ணா அதான்... 'கடலூரில்' இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முறை தவறிய காதலால் கடலூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் எழில்(26) இவரும் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(28) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். சுரேஷ்குமாரின் சித்தி மகள் தான் எழில். இருவரும் அண்ணன்-தங்கை முறை என்றாலும் கூட காதல் இவர்கள் கண்ணை மறைத்து விட்டது.
இந்த நிலையில் வழக்கம்போல நேற்று மதியம் இருவரும் வீட்டில் தனியாக இருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சுரேஷ்குமார், எழிலை கொலை செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டார். மாலை வீடு திரும்பிய எழிலின் பெற்றோர் எழில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போய் போலீசில் புகார் செய்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் எழிலின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சுரேஷ்குமார் கொலையாளி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்திருந்தவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
எழிலை கொலை செய்ததை சுரேஷ்குமார் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர், '' என்னுடைய அம்மாவின் தங்கை மகள் தான் எழில். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சமீபகாலமாக அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். நாம் இருவரும் அண்ணன்-தங்கை முறை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறினேன்.
ஆனால் அவள் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தினாள். இல்லையெனில் போலீசில் இதுகுறித்து புகார் செய்வேன் என்று மிரட்டினாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். உடலை கட்டிலுக்கு அடியில் கிடத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை துப்புதுலக்கி கண்டுபிடித்து விட்டனர்,'' என்றார்.
தற்போது சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியை அதிர வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கலவர' பூமியில் காக்கப்பட்ட 'உயிர்கள்'... "அவர்கள் மட்டும் வரவில்லை என்றால்..." 'கண்ணீரால்' நன்றி சொல்லும் '80 குடும்பங்கள்'...
- ‘பிரியாணி சாப்பிட்டுவிட்டு கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!’.. 2 மனைவிகளின் கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!
- "சார்... அண்டாவுக்கு முதல்ல பாதுகாப்பு குடுங்க சார்..." "இப்பல்லாம் தங்கத்தை விட இதுக்குத்தான் மதிப்பு அதிகம் சார்..." 'நூதன' மனுவால் திகைத்துப் போன 'போலீசார்'...
- வீட்ல 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு... இப்டித்தான் பண்றதா?... 'மதுரை' நபரை தட்டித்தூக்கிய போலீஸ்!
- ஏன் இதுவரைக்கும் 'விட்டு' வச்சிருக்கீங்க?... எல்லார் மேலயும் 'நடவடிக்கை' எடுங்க... விரைவில் 'மொத்தமாக' தூக்கப்போகும் போலீஸ்?
- லாரியை 'முந்த' முயன்றபோது.... 'நொடியில்' நேர்ந்த விபரீதம்... சம்பவ இடத்திலேயே 'பலியான' வாலிபர்கள்!
- 5 நாள் தானடா 'ஸ்ட்ரைக்' பண்ணோம்... அதுக்குள்ள இத்தனை 'கொலையா?...' 'போலீஸ்' மட்டும் இல்லைன்னா...' உறைய' வைக்கும் 'அதிர்ச்சித்' தகவல்...
- தேனி அருகே பயங்கரம்... 'பெற்ற மகள்' என்றும் பாராமல் 'தந்தை' செய்த கொடூரம்... தடுக்க முயன்ற 'மனைவிக்கு' கொலை மிரட்டல்!
- ‘தலை தனியே.. உடல் தனியே’.. நாயால் வெளிச்சத்துக்கு வந்த சடலம்..சேலத்தை நடுங்கவைத்த சம்பவம்!
- ‘ராங் நம்பர்’ மூலம் அறிமுகமான இளைஞர்.. கணவருக்கு தெரியாமல் மனைவி செய்த காரியம்.. வெளியான பகீர் வாக்குமூலம்..!