“அம்மா இறந்ததை ருக்குவிடம் சொல்ல முடியாம அழும் குட்டி இப்போது பார்த்தாலும் கண்கலங்க வெச்சிடுவார்” - ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வந்து 24 வருஷம் ஆச்சா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தளபதி விஜய், நடிகை சிம்ரன், நடிகர் மணிவண்ணன் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 29-ஆம் தேதி, 1999ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம், ‘துள்ளாத மனமும் துள்ளும்’.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவர்கூட தான்.. 10 வருஷ காத்திருப்பு.. இந்திய இளைஞரை கரம்பிடிக்க ஸ்வீடனில் இருந்து பறந்து வந்த இளம்பெண்..!

திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் சூழலுக்கு ஏற்ப அமைந்ததுடன், அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட் என்கிற பெயரை அடைந்தன.

இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விஜய், சிம்ரனை தூரத்திலிருந்து பாட்டு பாடி காதலிப்பார். சிம்ரனுக்கு விஜய்யை குட்டி என்கிற பெயரில் தெரியும். ஆனால் அவரை பார்த்ததில்லை. சிம்ரனின் பெயர்ர் ருக்கு என்கிற ருக்குமணி. ஆனால் விஜய் சிம்ரனை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் குட்டியாக அல்லாமல் , குட்டி ரவுடியாக சிம்ரனுக்கு தெரிவார்.

Images are subject to © copyright to their respective owners.

ஒரு கட்டத்தில் சிம்ரனின் கண் பார்வை, விஜய்யாலேயே பறிபோக, விஜய் தன் காதலை விடவும் முக்கியமாக கருதி, சிம்ரனின் கலெக்டர் கனவ நிறைவேற்ற போராடுவார். ஒரு கட்டத்தில் கலெக்டராகும் சிம்ரனுக்கு, போலீஸில் சிக்கியிருக்கும் விஜய்யை அடையாளம் தெரியாமல், குட்டி ரவுடி என நினைத்து போலீஸாரிடம் தண்டிக்க சொல்லி மேலும் ஒரு வார்த்தை சொல்லிவிடுவார்.

ஆனால் சிம்ரனுக்கு இந்த கலெக்டர் அந்தஸ்து உருவாகுவதற்கு விஜய் எத்தனையோ தியாகங்களை செய்து இருப்பார். அதில் வந்த ஒரு சிக்கலில்தான் போலீசில் மாட்டி கொண்டிருப்பார். இதை கடைசி காட்சிகளில் பத்து பதினைந்து பாய்ண்டு, வசனங்களை பேசாமல், ஒரு பாடலைப் பாடி முடிவுக்குக் கொண்டு வருவார் விஜய். அந்த பாடலை கேட்டதும் அத்தனையையும் மறந்து விட்டு விஜய்யை தேடி சிம்ரன் ஓடி வருவார். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் உருவான இன்னிசை பாடி வரும் பாடல் முக்கியமானது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 24 வருடங்கள் ஆனதை விஜய் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். பலரும் இப்படம் குறித்தும் ருக்கு எனும் கேரக்டருடனான காதலுக்காக குட்டி எனும் கேரக்டரில் வரும் விஜய் செய்யும் தியாகங்கள் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.  இப்போது நினைத்தாலும், ‘அம்மா இறந்ததை ருக்குவிடம் சொல்ல முடியாத சூழலில் பாத்ரூமில் உட்கார்ந்து குட்டி அழக்கூடிய காட்சி’, ‘குட்டி யாரென தெரியாமல் கலெக்டரான ருக்கு அடித்து விரட்டச் சொல்ல, வலிகளை தாங்கிக்கொண்டு இதழோரம் ரத்தம் வழிய இன்னிசை பாடி வரும் என குட்டி பாடும் காட்சி’ என ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் 90களின் இறுதியில் வந்த ஒரு ஃபீல் குட் நாஸ்டால்ஜியா என்றும் பலரும் தங்கள் பலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

Also Read | "சரவணன் நீங்க மாட்டிகிட்டீங்க..".. பரட்டை & சித்தப்பு கேரக்டர் பத்தி ரஜினி அடித்த கமெண்ட்..

THULLADHA MANAMUM THULLUM, 24 YEARS OF THULLADHA MANAMUM THULLUM, THALAPATHY VIJAY, SIMRAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்