‘அப்பா திட்டினார்..!’ செல்ல நாய்க்காக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! கோவையை அதிர வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாய் வளர்த்தற்காக தந்தை திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவுதா (23). இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவிதா மின்விசியில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கவிதா சீசர் என பெயரிட்ட நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழை பெய்ததால், நாய் பயத்தில் குறைத்துக்கொண்டே இருந்துள்ளது. இது அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையூராக இருப்பதாக புகார் வந்துள்ளது. இதனால் கவிதாவை அவரது தந்தை திட்டிவிட்டு நாயை எங்கேயாவது கொண்டு விடுவது என முடிவெடுத்தாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கவுதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கவிதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் ‘அப்பா, அம்மா, பாட்டி, தம்பி ஆகியோருக்கு, நான் செல்லமாக வளர்த்த சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். வாராவாரம் கோயிலுக்கு போக வேண்டும். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்’ என இருந்த போலீசார் தெரிவித்துள்ளனர். கவிதா உயிரிழந்தபின் அவர் வளர்த்த நாய் உணவு உண்ண மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் கவிதா தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய் வளர்த்தற்காக அப்பா திட்டியதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மயக்க ஸ்பிரே’ அடித்து பாட்டியை கொலை செய்த கொள்ளுப் பேரன்..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- ‘மாணவியின் மர்ம மரணத்தில் புதிய திருப்பம்’.. ‘உடலிலும், ஆடையிலும் ஆணின் டிஎன்ஏ கண்டுபிடிப்பு’..
- ‘இரண்டரை மாத பெண் குழந்தைக்கு’... ‘சொந்த தந்தையால்’... ‘சென்னையில் நடந்த பரிதாபம்’!
- ‘சரிதா நாயருக்கு’ 3 வருடம் சிறைதண்டனை!.. 'கூடவே அபராதத் தொகை'.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- 'திருமணமாகி ஓராண்டுதான்'... 'இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு'... 'கலங்கி தவிக்கும் பெற்றோர்'!
- ‘தற்கொலை என நினைத்தபோது’.. ‘இறுதிச்சடங்கில் 7 வயது மகள் கூறியதைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோன குடும்பத்தினர்’..
- ‘இன்குபேட்டரில் வைத்த குழந்தை’... ‘நொடியில்’... ‘தவறி விழுந்து நடந்த சோகம்’... வீடியோ!
- 'எவ்வளவோ எச்சரித்தும் கேட்காத கணவர்'... '5 வயது மகளுடன், இளம் தாய்’... ‘எடுத்த விபரீத முடிவு'!
- ‘தங்கையை கொன்று புதரில் வீசிய அண்ணன்’.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!
- ‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'!