'யார கேட்டு உள்ள நுழைஞ்ச...? முதல்ல வெளிய போ...' 'தனியாக இருந்த பெண்ணிடம் நள்ளிரவில்...' 'கோவத்தில் தோசைக்கல்லை எடுத்து...' கொடூர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்ததால், உதவி கேட்டு கத்திய பெண்ணை அருகில் இருக்கும் தோசைக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி(49) என்ற பெண்மணி தன் இரு பிள்ளைகள் மற்றும் கணவரோடு மைசூர், தரசிபுரா பகுதியில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் கோளாறால் கணவனை இழந்த லட்சுமி பிழைப்பிற்காக தன் இரு பிள்ளைகளுடன், திருப்பூர், பி.என்., ரோடு அருகே அண்ணா நகரில் தங்கி, கட்டட வேலை பார்த்து வந்துள்ளார்.
தன் சொந்த உழைப்பில் மகன் மற்றும் மகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது பிள்ளைகள் இருவரும் வெளியூரில் வசித்து வருவதால், லட்சுமி மட்டும் திருப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கும் சுரேஷ் என்பவரின் 22 வயதான மகன் பூபதி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தீடீரென கதவை கூட தட்டாமல் லட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமி 'யார கேட்டு உள்ள நுழைஞ்ச, வெளியே போ' என்று கத்தி கூச்சல் போட தொடங்கியுள்ளார்.
லட்சுமியை தடுக்க முயன்ற பூபதி கோபமடைந்து அறையில் இருந்த தோசைக் கல்லை எடுத்து லட்சுமியின் தலையில் தாக்கினார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலைக் குறித்து அறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்குவந்து லட்சுமியின் உடலை மீட்டு, கொலைக்கு காரணமாகிய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருப்பூரில்' கேட்ட 'பலத்த சத்தம்...' 'காரணம்' தெரியாததால் 'அச்சமடைந்த மக்கள்...' 'போலீசாருக்கும் குழப்பம்...'
- திருமணம் ஆன பெண்ணுடன் ‘தகாத உறவு’.. இரவு வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்..!
- VIDEO : 'குடை' கொண்டு வந்தா தான் 'அது' கிடைக்கும்... 'அறிவித்த' மாவட்டம்... 'ஒத்திகை' பார்த்து தயாரான நபர்!
- காதலனுக்கு வேறு பெண்ணுடன் 'நிச்சயதார்த்தம்'... 'பெங்களூரு' டூ 'திருப்பூர்'... விரைந்த பெண்ணிற்கு காத்திருந்த 'சோகம்'!
- ‘நண்பன் காதலியிடம் போனில் பேசிய வாலிபர்’.. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்.. திருப்பூரில் பரபரப்பு..!
- 'பத்து வருசமா எங்கள கொடுமைப்படுத்துறான்' ... 'எங்கள நிம்மதியா வாழ விடுங்க', 'இல்லைன்னா'... 'வயதான' பெற்றோரின் அதிர்ச்சி முடிவு
- ‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு’.. ‘வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்த ஹவுஸ் ஓனர்’.. திருப்பூர் அருகே பயங்கரம்..!
- 'தமிழகத்தை உலுக்கிய கோரம்'...'தூக்கத்துல கேட்ட மரண ஓலம்'... '20 பேரை காவு வாங்கிய' விபத்து நடந்தது எப்படி?
- 'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்!
- 'செக் பண்ணிட்டு போக வந்தாரு'... 'ஆலைக்கு வந்த தொழிலதிபர்'... இரவில் நடந்து முடிந்த சோகம்!