"கொரோனாவுல நல்ல வேட்டை!"... 'டிப்டாப்' உடை.. கிராம மக்கள் 'டார்கெட்'.. ஒரே நாளில் சிக்கிய 22 போலி டாக்டர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழை மக்களைக் குறிவைத்து போலி மருத்துவர்கள் வீதிக்கு வீதி வலம் வருகிறார்கள்.

டிப்டாப் உடை அணிந்து உண்மையான மருத்துவர்கள் பொலவே இந்த கொரோனா நேரத்தில் நடமாடும் மருத்துவர்கள் போல, அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல அச்சப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே இருக்கும் மக்களைக் குறிவைத்து மோசடி செய்துவந்த இந்த கும்பலை களையெடுக்க களமிறங்கினார் ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி.

இதனை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர்,  அம்மூர், காவனூர் பகுதிகளில் கிளினிக் நடத்தி வந்த 4 போலி மருத்துவர்களை அதிரடியாக கைது செய்தனர். இதனை அடுத்து போலி மருத்துவர்கள் தொடர்பான தகவல்களைச் சிறப்புக் குழுவினர் ரகசியமாக திரட்டி, ஒரே நாளில் 22 போலி மருத்துவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றில் சிலர் தப்பியோட,  சோளிங்கரில் 7 போலி மருத்துவர்கள், கலவையில் 3 பேர், ஆற்காட்டில் 2 பேர், வாலாஜாபேட்டையில் ஒருவர், நெமிலியில் 3 பேர், அரக்கோணத்தில் 6 பேர்  பிடிபட்டதோடு, இவர்கள் நடத்தி வந்த 33 கிளினிக்குகள் அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த போலி மருத்துவர்கள் கொரோனா சூழலில் அரசு மருத்துவமனைக்கு போக அச்சப்படும் பாமர மக்களுக்கு வைத்தியம் பார்ப்பது,  கருக்கலைப்பு, பிரசவம் உள்ளிட்டவட்டை செய்து வந்துள்ளனர். இவர்களின் மருத்துவமனை உபகரணங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், கைது செய்யப்பட்ட 22 பேரையும் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்