'டியர் 90ஸ் கிட்ஸ், இந்த மேட்ச் உங்களுக்கு நியாபகம் இருக்கா?'... பாகிஸ்தானை மிரள வைத்து... கும்ப்ளே சாதனை படைக்க ஸ்ரீநாத் செய்த உதவி!... அன்றைய மேட்ச்சில் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தானுக்கு எதிராக அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தார்.

1999ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடியது.

இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடத் தொடங்கியது. கடினமான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

ஆனால், அனில் கும்ப்ளே அபாரமாக பந்து வீச தொடங்கியதும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எண்ணம் ஈடேறாமல் போனது. இறுதியில் பாகிஸ்தான் அணி 207 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அனில் கும்ப்ளே 26.3 ஓவர்கள் வீசி 74 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை சாய்த்தார். அதில் 9 ஓவர்கள் மெய்டன்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே பெற்றார். இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர் இந்தச் சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கும்ப்ளே இந்த மகத்தான சாதனையைப் படைக்க வேகப் பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்தின் உதவி முக்கியப் பங்காற்றியுள்ளது. பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை அனில் கும்ப்ளேவிடம் இழந்திருந்தபோது, மீதமிருக்கும் ஒரு விக்கெட்டையும் கும்ப்ளே வீழ்த்த வேண்டும் என்பதற்காக, வேண்டும்மென்றே தனது ஓவரில் ஒரு வைட் வீசினார், ஸ்ரீநாத். இதன் மூலம், அவருக்குப் பின் பந்து வீசிய கும்ப்ளே கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி, 26.3-9-74-10 என்ற கணக்கில் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

CRICKET, KUMBLE, IND, PAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்