800 கிடா.. 100 மூட்டை அரசி.. ஆண்களுக்கு மட்டும் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்து.. 200 வருஷமா இப்படித்தானாம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சையில் 200 வருடங்களாக ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோத விருந்து இந்த வருடமும் விமர்சையாக நடைபெற்றிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "வீட்டு வாசனை பிடிக்கலயாம்".. Advance-ல ₹20 ஆயிரம் Cut பண்ண ஹவுஸ் ஓனர்! Tenant சொன்ன காரணங்களை கேட்டு தல சுத்தி போன நெட்டிசன்கள்

விருந்து

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஊர் காவல் தெய்வங்களுக்கு உள்ளூர் மக்கள் கிடா வெட்டி விருந்து போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மொத்த ஊரும் திரண்டு இதுபோன்ற விசேஷங்களை நடத்துவது வழக்கம். ஆனால், தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் வினோத விருந்து ஒன்று கடந்த 200 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விருந்தில் பெண்கள் கலந்துகொள்ள மாட்டார்களாம். ஆண்களே கிடா வெட்டி, சமையல் செய்து சாப்பிடவும் செய்கிறார்கள்.

ஒரத்தநாடு அருகே உள்ள தளிகைவிடுதி கிராமத்தில் எழுந்தருளியுள்ளார் நல்லபெரம அய்யனார். 21 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக எழுந்துநிற்கும் அய்யனார் சிலையுடன் செம்முனி, முத்துமுனி ஆகிய கிராம தெய்வங்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல் தெய்வம்

இங்குள்ள கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்துவருகிறது.  நல்லபெரம அய்யனார் காவல் தெய்வமாக இருந்து தங்களது ஊரை காப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில், விவசாயம் நல்ல முறையில் நடைபெறவும், ஊர் சுபிக்ஷமாகவும் திகழ ஒவ்வொரு ஆண்டும் அய்யனாருக்கு கிராம மக்கள் கிடா வெட்டி படையலிட்டு வழிபட்டு வருகின்றனர். இந்த பூஜை ஒவ்வொரு ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கிடா வெட்டு விழா நடைபெற்றது.

800 கிடா

இந்த ஆண்டு திருவிழாவில் 800 கிடா வெட்டப்பட்டு, 100 மூட்டைகளில் அரிசி சமைத்து பிரம்மாண்ட முறையில் விருந்து நடைபெற்றிருக்கிறது. இந்த விருந்தில் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 25,000 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை இரவு துவங்கிய கிடா வெட்டு வைபவம் முடிவடைந்தவுடன் ஆண்களே சமையல் வேலையையும் செய்திருக்கின்றனர். அதனையடுத்து 500 பேர் உதவியுடன் உணவானது பரிமாறப்பட்டிருக்கிறது.

200 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பிரம்மாண்ட விருந்தில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. திருவிழாவின் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்கள் இந்த கிடா வெட்டு மற்றும் விருந்தில் கலந்துகொள்வதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். 25,000 பேருக்கு நடைபெற்ற இந்த பிரம்மாண்ட கிடா விருந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Also Read | கூட்டமான மெட்ரோ ரயிலில் Casual உடையுடன் பயணம் செஞ்ச துபாய் இளவரசர்.. யாருமே கண்டுபிடிக்கலையாம்.. வைரலாகும் புகைப்படம்..அதுவும் எதுல தெரியுமா?

THANJAVUR, FEAST, MALES, ATTEND, விருந்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்