'சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்...' 'அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக...' தமிழக அரசு அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உத்தரவிடப்பட்டுள்ள 144 தடையின் காரணமாக சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மார்ச் 31வரை 144 தடை விதித்தது.
மேலும் நேற்று இரவு இந்தியமக்களிடம் காணொளி மூலம் பேசிய பிரதமர் நேற்று 6 மணி முதை வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடை சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் மட்டும் இனி 200 அரசு பேருந்துகள், அத்தியாவசியப் பணிகளில், அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்காக இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னையில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, மணலி, நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் வந்து ... தனிமையில் இருக்காமல் சுற்றி திரிந்த நபர் ... நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
- 'பெட் ரூமில் தூங்கி கொண்டிருந்த கணவன்'... 'திடீரென நர்ஸ் செய்த விபரீதம்'... சென்னையில் நடந்த கோரம்!
- 'அண்ணே, இந்த ஒன் மீட்டர் டிஸ்டன்ஸ்' ... அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு ... பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்ற மக்கள்!
- ‘நான் எந்த தப்பும் பண்ணல’.. ‘என் மேல் வீண்பழி போடுறாங்க’.. சென்னை வாலிபர் எடுத்த முடிவு.. நொறுங்கிப்போன குடும்பம்..!
- சென்னையில் பரபரப்பு!... கொரோனா சிகிச்சை வார்டில்... 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்ய ஏற்பாடு!... என்ன காரணம்?
- ‘சென்னையில்’ மேலும் ‘3 பேருக்கு’ கொரோனா... ‘பாதிக்கப்பட்டவர்கள்’ எந்தெந்த ‘பகுதிகளை’ சேர்ந்தவர்கள் என ‘அமைச்சர்’ தகவல்...
- 113 பேருடன் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானம்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி..!
- 'கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று மாலை முதலே பேருந்து சேவை நிறுத்தம்!' - ஊரடங்கு உத்தரவு எதிரொலி!
- "மாப்ள அரைப்பாடி லாரியை புடிச்சாவது ஊரு வந்து சேரு..." "அதான் நேத்தே கைத்தட்டி கொரோனாவ விரட்டியாச்சே..." 'கோயம்பேட்டில்' குவிந்த 'திருவிழாக் 'கூட்டம்'...
- 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?